கனடா நாட்டை சார்ந்த தமிழாழிப் பேரவை இந்த வருடம் உலக தந்தையர் தின விழா 2026 உலக சாதனை நிகழ்வாக கொண்டாட திட்டமிட்டது.
அதன்படி, 27 நாடுகள் 45 அமைப்புகள் ஐந்து மொழிகளைப் பேசும் மக்களைக் கொண்டு பாண்டிச்சேரியில் நடைபெற்ற மாபெரும் விழாவில் கலந்துகொண்ட 1048 கலைஞர்கள் தாபோர் பங்கேற்பாளர்களுடன் 111 மணி நேரம் தொடர்ந்து தந்தையின் பெருமையை அவரவர்களின் கருத்துக்களை தெரிவித்தனர். இந் நிகழ்ச்சி உலக வரலாற்று சாதனையாக சிறப்பாக நடைபெற்றது.

இவ்வரலாற்று சிறப்புமிக்க உலகச் சாதனை நிகழ்வில் கலைத்திறன் ஒத்துழைப்பு மற்றும் தமிழ் பணிக்கான அர்ப்பணிப்பை பாராட்டி கிருஷ்ணகிரி நகர், சமூக சேவகர் ரா.பிரபாகர் அவர்களுக்கு இச்சான்றிதழ் வழங்கப்பட்டது.
செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777
