திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த எடமணி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சமேத ஸ்ரீ ஜடராய ஈஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
மிக நீண்ட பாரம்பரியமிக்க இந்த ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் முடிந்து கும்பாபிஷேக தினமான இன்று நான்கு காலயாக பூஜைகளுடன் மகா பூர்ணாஹீதி நடைபெற்றது.

பின் கடம் புறப்பட்டு ஊர்வலமாக வந்து ஆலயத்தின் கோபுரத்திற்கும் பரிவார மூர்த்திகளுக்கும் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் தெளிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய எனும் கோஷம் எழுப்பினர். பின் தீப ஆராதனை காட்டப்பட்டு ட்ரோன் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
இதில், சென்னை, ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை குணசேகரன், பாண்டியன், மணிகண்டன், டாக்டர் பூபதி, மஞ்சு ஜோதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

செய்திகள் ; பழவை முத்து எதிரொலி / 8939476777
