திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள புதுச்சேரி மேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அங்காளம்மன் ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்துடன் ஆன்மீக பக்தர்கள் நிதி உதவியுடன் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ பெரியபாளையம் ஸ்ரீ பவானி அம்மன் ஆலயத்தின் திருப்பணிகள் முடிவுற்று கும்பாபிஷேக தினமான இன்று கோளூர் சுரேந்தர் ஐயர் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்று சர்வ சாதகர்கள் வேத பாராயணம் வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் குமார் ஐயர் அரக்கோணம் குகன் பிரகாஷ் ஆகியோர் சர்வ சாதகத்தில் கணபதி பூஜை உடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

நான்கு காலயாக பூஜைகளுடன் ஓமங்கள் வளர்க்கப்பட்டு மகாபூர்ணஹதி நடைபெற்று கடம் புறப்பட்டு மண்ணடி அம்மனுக்கும் ஸ்ரீ பவானி அம்மன் கோபுரத்திற்கும் ஸ்ரீ பொன்னியம்மன் ஸ்ரீ அங்காள ம்மன் ஆகியோருக்கு மா கும்பாபிஷேகம் நடைபெற்று பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை புதுச்சேரி மேடு கிராம பொதுமக்களுடன் டில்லி ரெட்டியார் சௌந்தர்ராஜன் ரெட்டியார் துணை உதவியாளர்களான முருகன் கோபி ரவி லோகு பாபு உள்ளிட்டோர் மேற்கொண்டனர் இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பொன்னேரி சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்திகள் ; பழவை முத்து எதிரொலி / 8939476777
