மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரம் சாலையில் உள்ள அரசு மதுபான கடையை அகற்றக் கோரியும், சரியான நேரத்திற்கு அரசு பேருந்துகள் கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரம் பகுதிகளுக்கு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கக் கோரியும், கிராமத்தின் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் வெற்றிலை கொடிக்கால் சங்கம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் கருப்பட்டி ரயில் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை இரண்டும் அருகருகே
உள்ளதால், பொதுமக்கள் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

குறிப்பாக, கருப்பட்டி ரயில் நிலையம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இரும்பாடி கருப்பட்டி கிராமத்திற்கு செல்லக்கூடிய பயணிகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு இந்த இரண்டு டாஸ்மாக் கடைகளால் கேள்விக்குறியாக உள்ளது. இது குறித்து பொதுமக்கள் தரப்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், பல்வேறு இடங்களில் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும் 2 டாஸ்மாக் கடைகளும் விவசாய நிலங்கள் உள்ள பகுதியில் இருப்பதால் மது பிரியர்கள் காலி மது பாட்டில்களை விவசாய நிலங்களுக்குள் போட்டு விட்டு செல்கின்றனர். இதனால் விவசாய வேலை செய்யும் விவசாய தொழிலாளர்களுக்கு காலி மதுபாட்டில்கள் மூலம் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அடிக்கடி செல்லக்கூடிய நிலை ஏற்பட்டு வருகிறது.

இது குறித்தும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் மனு வழங்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர். ஆகையால் பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என கிராமத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 20 நாட்களுக்கு முன்பு கருப்பட்டி பகுதியில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகியால் தாக்கப்பட்ட அரசு பேருந்து ஓட்டுனர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதன் காரணமாக அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி கருப்பட்டி இரும்பாடி பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்குவதில் போக்குவரத்து பணியாளர்களிடம் ஒரு வித அச்சம் ஏற்பட்டுள்ளது.

காவல்துறை போக்குவரத்து பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்து கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்தை இந்த பகுதிக்கு இயக்குவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட மனுவில் கிராம மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த இரண்டு கோரிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் பாதுகாப்பையும் அன்றாட தேவைகளையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளனர்.

கிராம பொதுமக்கள் சார்பில் 20 க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் சென்று மனு அளித்துள்ளனர் பாலகிருஷ்ணாபுரம் கிராம தலைவர் மாவட்டம் பிச்சை இரும்பாடி ஊராட்சி நாலாவது வார்டு முன்னாள் உறுப்பினர் அன்பு இரும்பாடி ஊராட்சி இரண்டாவது வார்டு முன்னாள் உறுப்பினர் செல்லப்பாண்டி பாலகிருஷ்ணாபுரம் விவசாயி சக்திவேல் பாலகிருஷ்ணாபுரம் விவசாயி பெரிய கருப்பன் என்ற குப்பைத்தொட்டி விவசாயி கருப்பன் மற்றும் சமூக ஆர்வலர் லட்சர் கான் சாகுல் அமீது உள்பட 20க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்துள்ளனர்.

செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed