ராமநாதபுரம் மாவட்டம், பனைக்குளம், சித்தார்கோட்டை, தேவிப்பட்டிணம், அரசூர், நகரிகாத்தான் ஆகிய பகுதிகளில் மருத்துவம் , மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை தமிழ்நாடு சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு. வி.கே. ராஜீவ் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் உடனிருந்தார்.
நிகழ்ச்சியில் , தமிழ்நாடு சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு. வி.கே.ராஜீவ் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், பனைக்குளத்தில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கூடுதல் கட்டடத்தையும், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், சித்தார்கோட்டையில் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கூடுதல் கட்டடத்தையும்,
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், தேவிப்பட்டிணத்தில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கூடுதல் கட்டடத்தையும், திருவாடானை வட்டம், அரசூரில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தையும், திருவாடானை வட்டம், நகரிகாத்தானில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் அரசு துணை சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தினையும் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு . வி.கே. ராஜீவ் தெரிவித்ததாவது :

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு மக்களின் மீது மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றார்கள். குறிப்பாக மருத்துவம் , மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் கிராமப்புற மக்களின் நலனை பேணிக்காத்திடும் வகையில்
மருத்துவமனைகளில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராமப்புற மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக வெளியூர் செல்வதை தவிர்க்கும் பொருட்டு, பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி மருத்துவமனைகளின் தரங்களை உயர்த்துவதன் மூலம் கிராமப்புற மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இன்றைய தினம் பனைக்குளம், சித்தார்கோட்டை, தேவிப்பட்டிணம், அரசூர், நகரிகாத்தான் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மருத்துவ சிகிச்சை, போதிய மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனை பொதுமக்கள் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தமிழ்நாடு சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு . வி.கே.ராஜீவ் தெரிவித்தார்.
நிகழ்ச்சிகளில் , வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷுநிகம், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.அர்ஜூன் குமார் , மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மரு.நடராஜன், தலைமை மருத்துவ அலுவலர் மரு.ரமேஷ் பாபு , வட்டார மருத்துவ அலுவலர்கள் மரு.ஜென்னத் யாஸ்மின் , மரு.வைதேகி , உதவி செயற்பொறியாளர் ரவீந்திரன் , உதவி பொறியாளர் பிரியங்கா, செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சாலி தளபதி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட மருத்துவர்கள் , செவிலியர்கள் , அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர் / எதிரொலி / 8939476777
