மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில் அய்யனார் கோவில் திருவிழாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நூறாவது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் இருந்து வேண்கள் மற்றும் கார்களில் ரசிகர்கள் குவிந்தனர். இவ்விழாவிற்கு சிவாஜி கணேசன் ரசிகர் மன்ற தலைவர் நெடுங்குளம் கணேசன் தலைமை தாங்கினார். அகில இந்திய பாரதிய கிசான் சங்க துணை தலைவர் பெருமாள் ஜி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அகில இந்திய சிவாஜி மன்றமதுரை மாவட்ட தலைவர் கோச்சடை ராஜா பொதுச் செயலாளர் முருகவேல் நாகராஜ் சிவாஜி பைன் ஆர்ட்ஸ் தலைவர் கணேசன் அண்ணாச்சி செயலாளர் வீர சந்திரசேகர் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் தண்டபாணி மற்றும் சிவாஜிகணேசன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மகாத்மா காந்தி சிலை பராமரிப்பு தலைவர் சாமிகாளை ஆகியோர் சிவாஜி குறித்து சிறப்புரையாற்றினார்கள்.

மாநில தலைவர், மதுரை நகர் மாவட்ட ரசிகர் மன்ற தலைவர், சிவாஜி சமூக ஆர்வலர் தலைவர், தூத்துக்குடி மாவட்ட ரசிகர் மன்ற தலைவர் ஆறுமுகப்பெருமாள், உட்பட பலர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட முதியோர் உதவித்தொகை வாங்கும் பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மதுரை சிவாஜி சினி ஆர்ட்ஸ் குழுவினர் சிவாஜி கணேசன் நடித்த சினிமா படங்களிலிருந்து பாடல்களுடன் இன்னிசை கச்சேரி நடந்தது. இந்த விழாவில் மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி,கடலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிவாஜி கணேசன் ரசிகர்கள் நூற்று கணக்கானோர் கலந்து கொண்டனர்.

நெடுங்குளம் கிராமத்தின் சார்பாக வந்திருந்த அனைவருக்கும் சால்வை அணிவித்து கௌரித்தனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777
