தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் 520வது ஆனி தேரோட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் , சிறு குறு தொழில்துறை அமைச்சர் மதன்ராஜ் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் ஆனி தேரோட்ட திருவிழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்று வந்தது. விழாவை தொடர்ந்து தினமும் காலையில் சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்தி களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
இதை அடுத்து காலை மற்றும் மாலையில் சுவாமி அம்பாள் பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் ரதவீதி வளம் நடைபெற்று வந்தது. இக்கோயிலில் சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட ஐந்து தேர்கள் உள்ளன. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஒன்பதாம் திருவிழா இன்று காலையில் தேரோட்ட திருவிழா கோலாகலமாக நடந்தது. முன்னதாக அதிகாலையில் விநாயக தேர் சுப்பிரமணிய தேர் பக்தர்கள் வடம் பிடித்து இழத்தனர்.

அதனைத் தொடர்ந்து காலை 7:00 மணி முதல் 8 மணிக்குள் தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேரான சுவாமி நெல்லையப்பர் தேரை அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் ,சிறு குரு தொழில்துறை அமைச்சர் மதன்ராஜ், எம் பி ராபர்ட் புரூஸ், எம்எல்ஏக்கள் ஆர் எஸ் முருகன், ரெட்டியார்பட்டி நாராயணன், கிறிஸ்டோபர் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ரானா, கோட்டாட்சியர் பிரியா, அறங்காவலர் குழு தலைவர் செல்லையா, காங் மாவட்ட தலைவர் ராமேஸ்வரன், தவெக மாவட்ட செயலாளர்கள் ராஜகோபால், மரிய தான் ,ஜாகிர் உசேன் உள்ளிட்ட பல லட்சக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

முன்னதாக அதிகாலையில் விநாயகர் சுப்பிரமணியர் தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நிலையம் சேர்த்தனர்.
செய்திகள் ; சுரேஷ் / எதிரொலி / 8939476777
