மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு ராஜேந்திரன் ஐபிஎஸ் அவர்களது உத்தரவுப்படி காவல் துணை ஆணையர் போக்குவரத்து வனிதா அவர்களது மேற்பார்வையில் தெற்கு போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் தங்கமணி அவர்களால் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த பேருந்துகளில் ஒலிப்பான்கள் அதிக சத்தத்துடன் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பயமுறு த்தும் உள்ளவைகளை ஆய்வு செய்து அவர்களுக்கு அபராத விதித்து அந்த முறையற்ற காற்று ஒலிப்பான் களை பறிமுதல் செய்தார்கள்.

இதில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் திரு மாணிக்கம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரி நித்யா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்ஆரப்பாளையம் மாட்டுத்தாவணி பெரியார் பேருந்து ஆகிய மூன்று இடங்களில் மொத்தம் 85 வாகனங்களுக்கு ஹாரன் நீக்கப்பட்டு தலா 1000 விதம் 85 ஆயிரம் அமராத விதிக்கப்பட்டது.

இந்த அதிகாரன் சப்தத்தினால் காற்று மாசுபடுதல் மற்றும் இதயம் பலவீனமானவர்கள் முதியோர்கள் பெண்கள் குழந்தைகள். பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் சாலையை சுற்றித் திரியும் விலங்குகள் இந்த சப்தத்தின் அச்சுறுத்தலால் அதிக விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதனால் இதனை நீக்கி வாகனங்கள் விடுவிக்கப்பட்டது.

செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777
