கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட புலியூர்குறிச்சி அருகில் அமைந்துள்ள உதயகிரி கோட்டை- பல்லுயிர் பூங்காவினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், (24.06.2026) அன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில், உதயகிரிக்கோட்டை வேணாடு அரசரான ஸ்ரீ வீரவிமர்மர் காலத்தில் மண்கோட்டையாக கட்டப்பட்டு பின்னர் மார்த்தாண்டவர்மர் காலத்தில் கற்கோட்டையாக மாற்றியமைக்கப்பட்டது. உதயகிரிக்கோட்டையில் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

பீரங்கிகள் உள்ளிட்ட போர்த்தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்கூடமாகும். சேமிப்பு கிடங்காகவும் இக்கோட்டை பயன்படுத்தப்பட்டது. சிறை கூடமாகவும் செயல்பட்டதாகவும் இங்கு 18 நூற்றாண்டின் இறுதி பகுதியில் திப்புசுல்தானின் படைவீரர்கள் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

தற்போது உதயகிரி கோட்டை பல்லுயிர் பூங்காவாக செயல்பட்டு வருகிறது.
உதயகிரி கோட்டை பல்லுயிர் பூங்கா மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இங்கு வரும் பொதுமக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தவும், மற்றும் நடைபாதைகளைச் சீரமைக்கவும், பூங்காவின் தூய்மை மற்றும் பசுமையைப் பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இக்கோட்டையில் பல்வேறு உயிரினங்கள் குறிப்பாக அரியவகை பட்டாம்பூச்சிகள், விலங்குகள், பறவைகள், பாம்பு வகைகள் உள்ளிட்டவைகளின் சரணாலயமாக விளங்கி வந்தது. அதேபோன்று திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பழமை மாறாமல் பூங்கா புதுப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு களஆய்வு மேற்கொண்டு, நமது உதயகிரி கோட்டை பல்லுயிர் பூங்காவினை புதுப்பித்திட நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தபட்டது.

மேலும், உதயகிரி கோட்டை வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்கா, குளம் உள்ளிட்டவைகளை மேம்படுத்திட திட்ட வரைவு தயாரிக்க பத்மநாதபுரம் நகராட்சி ஆணையர், வனத்துறையினர். தொல்லியல் துறையினர் உள்ளிட்டவருக்கு அறிவுறுத்தப்பட்டது. மன்னர் மார்த்தாண்டவர்மர் பிள்ளை காலத்தில் படைத்தளபதியாக இருந்த டிலனாய்டு அவர்களின் கல்லறை இக்கோட்டையில் தான் உள்ளது.

இக்கல்லறையினை புதுப்பித்து அவருடைய வாழ்க்கை வரலாற்றினை சுற்றுலாப் பயணிகள் அனைவரும் படித்து தெரிந்து கொள்ளும்படி வண்ணப் பலகை அமைத்திட அறிவுறுத்தப்பட்டதோடு, அனைத்து வகை உயிரினங்கள் குறித்தும் பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி தளத்தினை புனரமைத்து, சுற்றுலா பயணிகள் வந்த இரசிக்க கூடிய நல்ல சூழலை உருவாக்கிட கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆகவே உலக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் அளவுக்கு பல்லுயிர் பூங்கா மேம்படுத்தப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மு-பிரதாப், தெரிவித்தார்கள்.

அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், பூங்காவில் உள்ள அரிய வகை தாவரங்கள் மற்றும் பல்லுயிர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
நடைபெற்ற ஆய்வில் உதவி வன அலுவலர் திரு.ஸ்ரீ வல்சன், இணை ஆணையர் இந்து சமய அறநிலை துறை .ஜான்சி ராணி, பத்மநாபபுரம் நகராட்சி ஆணையர் கண்மணி, கல்குளம் வட்டாட்சியர் ராஜேஷ், தொல்லியல் மற்றும் வன அலுவலர்கள், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

செய்திகள் ; சுரேஷ் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed