தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து நேற்று மாலை 6 மணி அளவில் (TN 72N 2458) ஒரு பேருந்து மதுரை நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் உள்ளே விளக்குகள் எரியவில்லை. மேலும், கனமழை செய்து கொண்டு இருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த பேருந்தில், பைபர் ஒர்க் ஆகவில்லை.

இதனால், அந்த பேருந்தின் ஓட்டுநர் மிகவும் சாமர்த்தியமாக தடுமாறி பேருந்தை இயக்கி வந்து கொண்டிருந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பயணிகள் மிகவும் அச்சத்துடனே அந்த பேருந்தில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஓட்டுநரிடம் பயணிகள் இந்த பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பிய போது, தூத்துக்குடி அரசு போக்குவரத்து டிப்போவிற்கு கொண்டு சென்று நாங்கள் இந்த பேருந்தில் இருக்கக்கூடிய குறைகளை சுட்டிக்காட்டி புகார் தெரிவிப்போம். ஆனால், வண்டியை அங்கே வேலை செய்ய போதிய ஆட்கள் இல்லாததால் மதுரையோ அல்லது அருப்புக்கோட்டையில் கொண்டு போய் பழுது பார்த்து கொள்ளுங்கள் என அனுப்பி விட்டார்கள். எனக் கூறினார்.

பேருந்தில் ஓட்டுநர் மிகவும் திறமையாக பேருந்தை ஒட்டி சென்றாலும், பயணிகள் உயிரை கையில் பிடித்து கொண்டு, கொட்டும் மலையில் வைபர் ஒர்க் ஆகாத நிலையில் ஓட்டுநர் தொடர்ந்து அந்த வாகனத்தை ஓட்டிச் சென்றது பயணிகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

யாரும் பயப்படாதீர்கள், நான் பார்த்து ஓட்டி விடுவேன், 50 பேருக்கு இப்போது மாற்று பேருந்து ஏற்பாடு செய்யக்கூடிய சூழ்நிலை இல்லை, எனவும், நான் மெதுவாக ஓட்டி விடுகிறேன் என பயணிகளுக்கு ஓட்டுநர் தைரியம் சொல்லிக்கொண்டே, தொடர்ந்து விடாத அடை மழையிலும், ஓட்டுனர் தொடர்ந்து திறமையாக பேருந்தை ஓட்டிச் சென்றார்.

எது எப்படியோ உருப்படியாக ஊர் போய் சேர்ந்தால் போதும் என பயணிகள் அச்சத்துடனே பேருந்தில் பயணிக்கிறார்கள்…

செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed