பண்டைக்கால் மக்கள் காசுகள் பழக்கத்திற்கு வருவதற்கு முன்பாக சில கனிகளையும் கிளிஞ்சல்களையும், வேறு சில பொருட்களையும் பண்டங்கள் வாங்க இடைப்பொருளாகப் பயன்படுத்தியுள்ளனர்.
இந்தியாவில் கி.மு.6 ஆம் நூற்றாண்டிலிருந்து, “கார்ஷா” பணம் வணிகத்தில் பயன்படுத்தப்பட்டதை புத்த ஜாதகக் கதைகளிலிருந்து அறிய முடிகிறது.
சங்க காலத்தைச் சார்ந்த பெருவழுதிக் காசுகள், மலையமான் காசுகள், கொல்லிபுறைக் காசுகள், குட்டுவன் கோதைக் காசுகள், செழிய செழியன் காசுகள் என பலவகையான காசுகள் கண்டறியப்பட்டுள்ளது.





மதுரை, தஞ்சை,செஞ்சி, வேலூரை மையமாகக் கொண்டு ஆட்சி செய்த நாயக்க மன்னர்கள் செப்புக்காசுகளையும், பொன், வெள்ளிக் காசுகளையும் அச்சிட்டுள்ளனர்.
மதுரை விசுவநாத நாயக்கர் வெளியிட்ட சில காசுகளில் ஒரு புறம ” பாண்டியன் ” என்றும் மறுபுறம் ” விசுவநாதன் ” என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.
முதலாம் கிட்டப்ப நாயக்கர் காசில் ” கிட்டப்ப நாயக்கர் ” என்றும், வீரப்ப நாயக்கர் காசுகளில் ” வீ ” என்றும், இரண்டாம் கிருஷ்ணப்பநாயக்கர் காசுகளில் ” ஸ்ரீகிருஷ்ண ” என்றும், திருமலை நாயக்கர் காசுகளில் ” திருமலா “, ” தி “,. ” நா ” என்றும், ராணி மங்கங்கம்மாள் காசுகளில் ” ஸ்ரீமங்கம்மா “, ” ஸ்ரீமங்கமா “, ” மங்கமா ” என்றும், விஜய ரங்க சொக்கநாத நாயக்கர் காசுகளில் ” ” ஸ்ரீரங்கராய ” என்றும் பொறிக்கப்பட்டுள்ளன.






நாயக்கர் காசுகளில் உள்ள உருவங்களை தெய்வஉருவங்கள், அரச அரசியர் உருவங்கள, உயிரின உருவங்கள் என மூன்று வகையாகப் பகுக்கலாம்.
திருமால், அனுமன், கருடன், ராமன் சீதை, இலட்சுமி நரசிம்மர், சிவன் பார்வதி, போன்ற இறையுருவங்கள் காணப்படுகின்றன.
இப்படி காசுகளை வைத்தே நம்முன்னோர்களின் வரலாற்றை ஓரளவு அறிய வைக்கும் ஆயிரமாயிரம் கதைகள் சொல்லும் களஞ்சியமாகத் திகழ்வது இந்த நாணயங்கள் தான்.


நமக்கு வரலாற்றை செய்தியாகச் சொல்லும் இந்த நாணயங்களை சேகரிப்பில் ஆர்வம் கொண்ட என்னுடைய பல ஆண்டுகள் சேகரிப்பில் உள்ள, பழைய மற்றும் இன்றும் புழக்கத்தில் உள்ள காசுகள் உட்பட , சில பல வேறு நாணயங்களின் படத் தொகுப்பை உங்களின் மேலான பார்வைக்கு சமர்ப்பிக்கின்றேன்.
வரலாறு சொல்லும் நாணயங்கள்
நீங்களும் காணுங்கள்.

செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777
