மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வருகை தந்தார். அதை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;-
அமைச்சர் என்கிற முறையை விட ஒரு சகோதரனாக சொல்கிறேன் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய எந்த பள்ளிக்கூடத்திற்கும் எப்போது வேண்டுமானாலும் முன்னறிவிப்பின்றி நான் வருவேன் என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.
இது எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டாம் பொறுப்புணர்வாக அதிகாரிகள் ஆசிரியர்கள் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். கூட்டுப் பொறுப்புணர்ச்சியுடன் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறோம் என்பதை உணர வேண்டும். சொல்லிவிட்டு சம்பிரதாயத்திற்கு வருவதாக இருக்காது.
தமிழகம் முழுவதும் 38 மாவட்டத்திலும் எப்போது வேண்டுமானாலும் நாங்கள் நேரில் வந்து பார்ப்போம் எனவே தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டியது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கூட்டுப் பொறுப்புணர்ச்சி.

சாலைகளில் அரசு பள்ளிகளில் வழங்கப்படும் நோட்டு புத்தகப் பைகள் வீசப்படுவது தொடர்பான கேள்விக்கு?
உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டேன் அந்த குறிப்பிட்ட பள்ளிக்கூடத்தில் ஏற்கனவே அந்த குழந்தைகளுக்கு பேன்சியான நோட்டு புத்தக பை வாங்கி கொடுத்து இருக்கிறார்கள்.
அந்த குழந்தைகள் வீட்டில் உள்ள பேக்கை வாங்கியதால் பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கிய அந்தப் பையை வாங்கிவிட்டு பைக்குள் இருந்த பொருள்களை ஏற்கனவே இருந்த புது பையில் வைத்து விட்டு போகும் போது விளையாட்டாக அரசு புத்தக பையை தூக்கி எறிந்து இருக்கிறார்கள்.
இதை சிலர் போட்டோ வீடியோ எடுத்து இருக்கிறார்கள் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் அந்தப் பையை எடுத்து வைத்திருக்கிறார்கள் எவ்வளவோ ஏழை குழந்தைகள் இருக்கிறார்கள் உரிய முறையில் மற்ற குழந்தைகளுக்கு அது கொண்டு சேர்க்கப்பட்டது.
அனைவருக்கும் சமமாக கொண்டு சேர்ப்பது தான் இந்த திட்டம் ஒரு இடத்தில் நடந்தது. சமூக வலைதளத்தில் சுட்டி காட்டப்பட்டதை தொடர்ந்து தலைமை ஆசிரியர் அதை பறிமுதல் செய்துவிட்டார்.

திமுக தயவில் ஆட்சி நடைபெறுகிறது ? மூன்று மாதத்தில் ஆட்சி கலைக்கப்படும் என ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்கு?
ஒரு மூத்த அரசியல் தலைவர் முதிர்ச்சியான அரசியல் தலைவர் இன்றைய நிலையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய முன்னாள் முதல்வர் அப்படி கூறியிருக்க வேண்டாம்.
நம்மைப் பொறுத்த அளவு நம் கூட்டணியில் இருப்பவர்களை சொன்னது படி மாண்புமிகு முதல்வர் அமைச்சரவையில் இடம் கொடுத்திருக்கிறார்.
வன்னியரசு தோழருக்கு அமைச்சசரவையில் இடம் கிடைத்திருப்பது அவருக்கான தனிப்பட்ட மனிதருக்கானது இல்ல. நீண்ட காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அங்கீகாரம். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது குறளற்றவர்களுக்கு குரலாக இருப்பதற்கான அடையாளம்.
கூட்டணி என்கிற பெயரில் அவர்கள் முதுகில் ஏறி சவாரி செய்துவிட்டு வாக்குகளை மட்டும் வாங்கிவிட்டு அவர்களுக்கான அங்கீகாரத்தை தராமல் இருந்தார்கள்.
முதல்முறையாக தமிழக அரசியலில் மாண்புமிகு முதல்வர் அதை நிறைவேற்றி காட்டி இருக்கிறார் உங்கள் மூலமாக அவருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீட் தேர்வு ரத்து மசோதா சட்டசபையில் திருமணம் நிறைவேற்றப்படுமா?
இன்னும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்கான ஆலோசனைகள் நடைபெறுகிறது wait and watch என அமைச்சர் ராஜ் மோகன் கூறினார்.
செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777
