கிருஷ்ணகிரியில் தமிழக வெற்றி கழக தலைவர் தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் ஆலோசனையின்படி, கழகப் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்தின் வழிகாட்டுதலின்படி, மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் தலைமை அலுவலகம் திறப்பு விழா கிருஷ்ணகிரி டான்சியில் மத்திய மாவட்ட கழக செயலாளர் சுரேஷ் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக சிறப்பு விருந்தினர்களாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் வேந்தர்கரசன் (எ) வடிவேல்,, மற்றும் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ,சூளகிரி மதுஹேம்நாத் ஆகியோர் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தனர். அதிகாலை யாகங்களுடன் பூஜை நடத்தி பின்னர் ரிப்பன் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேற்கொண்டு மேற்கு மாவட்ட இணைச் செயலாளர் ஹரிஷ்குமார், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் முரளிதரன், மற்றும் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் முகுந்தன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியில் கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரகு, விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் தமிழ்மணி, உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலர் கலந்து கொண்டனர். பின்னர் அங்கு கூடியிருந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. விழா நிகழ்ச்சியை மத்திய மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் ஜி.பார்த்திபன் ஒருங்கிணைத்து சிறப்பாக செய்திருந்தார்.
மத்திய மாவட்ட தவெக அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைவர் சுரேஷ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் உமர், தமிழக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகி முபாரக் பாய், வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட துணை செயலாளர் மகேந்திரன் இளையப்பன், மகேந்திரன், பொருளாளர் முருகேசன்,செயற்குழு உறுப்பினர் ஹேமப்பிரியா சுரேஷ், ரத்னவேல், கல்வியாளர் வி.வி.மூர்த்தி, தொழிலதிபர் சுரேஷ், மற்றும் தவெக மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், வார்டு, கிளை, சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், உள்ளிட்ட கழகத் தோழர்கள் ஏராளமான கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777
