ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் , ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலையில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு. வி.கே.ராஜீவ் அனைத்து துறை தலைமை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு ஆய்வு செய்தார் .
ஆய்வின் போது , தமிழ்நாடு சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.வி.கே.ராஜீவ் காவல் துறை, வளர்ச்சித்துறை, மருத்துவத்துறை, வருவாய்த்துறை, பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், மகளிர் திட்டம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள் துறை, வேளாண்மை துறை, கூட்டுறவுத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களை கேட்டறிந்ததுடன், மேலும் திட்டங்களின் விரிவாக்கம் குறித்தும் கேட்டறிந்து மக்களுக்கு அரசின் திட்டங்கள் முழுமையாக சென்றடைய வேண்டும். அதற்கேற்ப திட்டமிட்டு அலுவலர்கள் செயல்பட வேண்டும் என்றார்.
திட்டங்களின் செயல்பாடுக்கு ஏற்ப உட்கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் பார்வைக்கு கொண்டு சென்று அவரது ஆலோசனைப்படி செயல்படுத்தப்படும்.

மேலும், ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதே தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் நோக்கம் ஆகும். அதற்கு ஏற்ப ஒவ்வொரு துறையும் சிறப்பாக செயல்பட வேண்டும். அலுவலர்களின் பணிக்கு அரசு உறுதுணையாக இருக்கும் என தமிழ்நாடு சுற்றுச்சூழல் , காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு. சி.கே.ராஜீவ் தெரிவித்தார்.
கூட்டத்தில் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ்., மாவட்ட வனஉயிரின காப்பாளர் அகில்தம்பி , மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் , வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் திவ்யாஷீநிகம், செய்தி — மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ. பாண்டி, உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்
