ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த பூவலிங்கம் என்பவர் தனது காரினை மதுரை பழங்காநத்தம் அருகேயுள்ள வெங்காடசலபுரம் பகுதியில் உள்ள மெக்கானிக் செட்டில் ஒன்றில் கடந்த வாரம் சர்வீஸ்காக நிறுத்தி சென்றுள்ளார். அவரது காருக்கான உதிரி பாகங்கள் கிடைக்காத நிலையில் 4 நாட்களுக்குப் பிறகு உதிரி பாகங்களை வாங்கி வந்த நிலையில் சர்வீஸ் செய்வதற்காக காரின் அருகே சென்றபோது கடும் துர்நாற்றம் வீசியுள்ளது.

அப்போது காரின் கதவை திறந்து பார்த்தபோது காருக்குள் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளது. பின்னர் சுப்பிரமணியபுரம் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பெண்ணின் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்ட காரில் அழுகிய நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் கொலையா என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

செய்திகள் ; காளமேகம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed