வேலூர் மாவட்டம் குடியாத்தம் விநாயகபுரம் பகுதியில் அமைந்துள்ள ஒன் மேன் தற்காப்பு கலை பயிற்சி மையத்தின் மாணவ, மாணவிகள் மாவட்ட மாநில தேசிய சர்வதேச அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் வெற்றி பெற்று உள்ளனர்.

வேலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை வெற்றி பாதையில் வழிநடத்தி வரும் பயிற்சியாளர் ஆர். மோகன்குமார், மற்றும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி எம்.எல் .ஏ. சிந்து அழகப்பன் சால்வை அணிவித்து பாராட்டி, வாழ்த்தினார்.

மேலும், விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு தமிழக முதல்வர் அவர்கள் என்றும் துணை இருப்பார், மேலும், இப்பகுதியில் கிக் பாக்ஸிங் மட்டும் இல்லாமல் மற்ற விளையாட்டுகளிலும் ஆர்வம் உள்ள மாணவ, மாணவிகளுக்கும், இளைஞர்களுக்கும் நான் என்றும் உதவியாக இருப்பேன் என உறுதி உறுதி அளித்தார்.

இந்நிகழ்ச்சியில், த.வெ.க.கட்சி பொறுப்பாளர்கள்
மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹரி, நகரச் செயலாளர் இளங்கோ, மேற்கு மாவட்ட மகளிர் அணி இணை அமைப்பாளர் சவிதா, சத்யா உடன் இருந்தனர். கே .எஃப். ஜி. அசோக் ஜுவல்லரி ,கே .திலீப்குமார் ,மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் உடற்பயிற்சி மையத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறினர்.

மேலும், பல சாதனைகளை செய்ய நாங்கள் துணை நிற்கிறோம் என்று உறுதி அளித்தனர். பயிற்சியாளர் ஆர். மோகன் குமார் தங்களுக்கு உறுதுணையாக நின்ற அனைத்து நிறுவனங்கள் மற்றும் சேவை மனப்பான்மை கொண்டு எங்களுக்கு உடன் இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

ஏபிஜே அப்துல் கலாம் ஜிம், செதுக்கரை ஸ்ரீ குமரன் எலக்ட்ரானிக்ஸ், கே .எம். ஜி. கல்லூரி , மகாராஜா இனிப்பகம் , குறிப்பாக இவர்களின் உறுதுணையால் நாங்கள் இவ்வாறு சாதித்துள்ளோம் என்பதை பயிற்சியாளர் பெருமிதமாக தெரிவித்து அனைவருக்கும் மனமார்ந்த நன்றி கூறினார்.

வேலூர் மாவட்ட செய்தியாளர் ; மூர்த்தி எதிரொலி / 8939476778

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed