விஜய் முதல்வராகவும் பூர்ண நலத்துடன் தொடர்ந்து நல்லாட்சி செய்திட தவெகவினர் சிறப்பு பிரார்த்தனை ;

திருப்பரங்குன்றம் அருகே, வில்லாபுரம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் விஜய் முதல்வர் ஆனதை தொடர்ந்து பூர்ண நலத்துடனும் தொடர்ந்து தமிழக மக்களுக்கு நன்மைகள் செய்த ஆட்சியில் தொடர வேண்டும் என்று மண்டியிட்டு பிரார்த்தனை செய்தனர்.

மேலும் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பெருவாரியான வாக்குகள் அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து இனிப்புகள் வழங்கி 108 தேங்காய் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றினார் .

தமிழக வெற்றி கழகம் சார்பில் 90 91 வது வட்ட கழக நிர்வாகிகள்
ராம்குமார், நவின் பிரசாத், நகேந்திரபிரசாத், திருகண்ணன்
பாலாஜி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றதற்கும் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றதற்கும் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு வில்லாபுரம் மீனாட்சி நகர் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 108 தேங்காய் உடைத்து மண்டியிட்டு பிரார்த்தனை செய்தனர் பின்னர் வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து இனிப்பு வழங்கினர்.

செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed