ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது:
   
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1435-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் கணக்கு முடிப்பு (ஜமாபந்தி) 19.05.2026 முதல் 29.05.2026 வரை (சனி, ஞாயிறு, திங்கள் கிழமை , பக்ரீத் அரசு விடுமுறை நீங்கலாக) வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.
  
1435ம் பசலி ஆண்டு (2025-2026) கோரிக்கை தொடர்பான மனுக்களை ஜமாபந்தி அலுவலரிடம் நேரடியாகவும், https://cmhelpline.tnega.org/support/upgems/ShowHomePage.do#Cases/new , என்ற இணைய தளம் அல்லது இ-சேவை மையங்கள் மூலமாகவும் 19.05.2026 முதல் 29.05.2026 வரை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் எனவும், பதிவேற்றம் செய்யப்படும் மனுக்கள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு மனுதாரர்களுக்கு தீர்வு வழங்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed