மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்த நெல்கள் கொள்முதல் செய்யப்படாமல் பல ஆயிரம் முட்டைகள் தேக்கமடைந்துள்ளது 10 நாட்களுக்கு மேலாக தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சோழவந்தான் அடுத்து குருவித்துறையில் அறுவடை செய்த நெல்கள் கொள்முதல் நிலையங்களில் 10 நாட்களுக்கும் மேலாக கொள்முதல் செய்யாமல் தேக்கமடைந்துள்ளது சுமார் 2000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஏக்கருக்கு 30,000 முதல் 40 ஆயிரம் செலவு செய்து அறுவடை செய்த நெல்களை கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கொள்முதல் செய்யப்படாததால் தங்களுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அச்சம் தெரிவிக்கின்றனர் அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர் விவசாயிகளின் நலன் கருதி குருவிதுறையில் கொள்முதல் செய்யப்படாத நெல்லை உடனடியாக கொள்முதல்செய்து குடோன்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி / 8939476777
