சிவகங்கை மாவட்டம், இளையான்குடி கல்வி கொடையாளர்களின் சிந்தனையில், 1970-ம் ஆண்டு உருவாகி 54 ஆண்டுகள் பொன்விழா கடந்து கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி கனவினை நினைவாக்கி கொண்டிருக்கும் கல்லூரி தான் டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி,
ஒழுக்கம், கடின உழைப்பு என்னும் உயரிய செங்கோல் தாங்கி கல்வி சேவை புரியும் இக்கல்லூரியில் 8 இளங்கலை , 1 முதுகலை அரசு உதவிபெறும் பாடப்பிரிவுகளும், 5 இளங்கலை , 5 முதுகலை சுயநிதி பாடப்பிரிவுகளும் 3 ஆராய்ச்சி பிரிவுகளும் கற்பிக்கப்படுகிறது. கிராமப்புற மாணவியர்கள் அதிகம் பயிலும் இக்கல்லூரியில் தற்போது 2500 மாணவர்-மாணவியர்கள் உயர்கல்வி பயின்று வருகின்றனர்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைவு பெற்ற இக்கல்லூரி மாணவர்கள் , மாணவியர்கள் ஒவ்வாரு கல்வியாண்டிலும் பல்கலைக்கழக ரேங்க் பெறுவது கல்லூரியின் சிறந்த கல்வி போதித்தலுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தேசிய தர மதிப்பீடு குழுவினரால் நான்கு முறை தர மதிப்பீடு செய்யப்பெற்ற ஒரே பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரி,
மாணவியர்கள் பாதுகாப்பாக கல்லூரிக்கு வந்து செல்ல இளையான்குடி, பரமக்குடி , சுற்றுவட்டார கிராமங்களுக்கு குறைந்த கட்டணத்தில் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. மாணவியர்களுக்கு பாதுகாப்பான விடுதி வசதி உள்ளது. மாணவர்-மாணவியர்களின் வருகை பதிவு இணையவழி ஆக்கப்பட்டு கல்லூரிக்கு வருகை புரியாத மாணவர்-மாணவியரின் பெற்றோருக்கு நாள்தோறும் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. கல்லூரி வகுப்பறைகள் முழுவதும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு மாணவர்-மாணவியரின் வகுப்பறை செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகிறது.
ஓய்வு நேரத்தில் நான்கு சக்கர வாகன ஓட்டும் பயிற்சி அளிக்கப்பட்டு ஓட்டுநர் உரிமம் பெற்று தரப்படுகிறது. மாணவியர்களுக்கு தையல் பயிற்சியும் வழங்கப்படுகிறது.
விளையாட்டு துறையிலும் கல்லூரி மாணவர்-மாணவியர்கள் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். தேசிய , மாவட்ட அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கல்லூரி மாணவர்-மாணவியர்கள் பல்வேறு பரிசுகளை பெற்று, பல்கலைக்கழக அளவில் , மாநில அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற தகுதி பெறுகின்றனர். இக்கல்லூரியில் சுமார் இரண்டு கோடி ரூபாயில் பெண்களுக்கான உள்விளையாட்டு அரங்கம் அமையப் பெற்று பயன்பாட்டிற்கு தயாராகி வருகிறது.
கல்லூரியில் சிறப்பாக செயல்படும் நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை, உன்னத் பாரத் அபியான், தொழில் முனைவோர் மேம்பாட்டு கழகம் மூலம் மாணவர்-மாணவியரின் சமூக செயல்பாட்டு திறன் மேம்பட உதவுகிறது.
தமிழக அரசின் தகவல் தொழில் நுட்ப துறை சார்பாக இறுதியாண்டு மாணவர்-மாணவியருக்கு இலவசமாக பல்வேறு திறன் வளர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற மாணவர்-மாணவியர்கள் அரசு, தனியார் , வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை எளிதில் பெறுகின்றனர். கல்லூரியில் பயிலும் ஏழை எளிய மாணவர்-மாணவியருக்கு பழைய மாணவர் கழகம் மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
கடந்த கல்வியாண்டில் மட்டும் 64 பேர் கல்வி உதவித்தொகை பெற்றுள்ளனர். காற்றோட்டமான, அமைதியான வகுப்பறைகள், மாணவர், மாணவியர்களுக்கு உடற்பயிற்சி கூடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான கழிப்பறைகள் 24,000 க்கும் மேற்பட்ட புத்தகங்களை கொண்ட நூலகம், குளிரூட்டப்பட்ட உள் கலையரங்கம், 1000 பேர் அமரக்கூடிய திறந்த வெளி கலையரங்கம், மாணவியர்களுக்கு ஓய்வு அறை, நிறைவு பெற்ற அறிவியல் ஆய்வு கூடங்கள் மேலும், கல்லூரியில் ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதாக கல்லூரி செயலர் ஜனாப் வி. எம். ஜபருல்லாகான் முதல்வர் எஸ். இ. ஏ.ஜபருல்லாகான் ஆகியோர் பெருமைபட தெரிவித்தனர்.

மாமுஜெயக்குமார்.
சிறப்பு செய்தியாளர் / எதிரொலி/ 8939476777
