விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டி கண்மாய் பகுதியில் அழிந்து வரும் பனையை பாதுகாக்கும் வகையில் 10 ஆயிரம் பனை விதை நடும் பணிகள் நடந்தது. இதற்கான துவக்க விழா நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில், கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பனை விதை நடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் முதற்கட்டமாக ஆயிரம் பனை விதைகள் நடும் பணி துவங்கியது. வத்திராயிருப்பு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கண்மாய்களில் தொடர்ந்து 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பனை விதைகள் நடும் நட முடிவு செய்யப்பட்டதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
செய்திகள் : தேவதர்ஷினி / எதிரொலி / 8939476777
