மதுரை மாவட்டம்
சோழவந்தான்
தனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் மருத்துவர் பாலமுருகன் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இன்று 1.05 மணி அளவில் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என் வாடிப்பட்டி நீதிமன்றம் முன்பு இருந்து ஊர்வலமாக வந்து வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் வருகை தந்த அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சோழவந்தான் தனித் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் சமயநல்லூர் டாக்டர் பாலமுருகன் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து தேர்தல் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

பின்னர், வெளியில் வந்த கழக வேட்பாளர் பாலமுருகனுக்கு கட்சி தொண்டர்கள் கூட்டணி கட்சியினர் உட்பட ஏராளமானோர் மலர் மாலை சால்வை அணிவித்து வரவேற்பு கொடுத்தனர். பின்னர் காரில் ஊர்வலமாக சென்று வாடிப்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்௭pç

தொடர்ந்து அங்கிருந்த பொது மக்களிடம் தென்னந்தோப்பு சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். இந்த நிகழ்ச்சியில், கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *