ஸ்ரீ வில்லிப்புத்தூர் செப்டம்பர் 18
ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ ஆண்டாள் திருக்கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, கிளி, பரிவட்டம் உள்ளிட்டவை திருமலை திருப்பதிக்கு புறப்பட்டு சென்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை பட்டு ஆகிய மங்கல பொருட்கள் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரமோட்சவத்தின் போது திருப்பதியில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவையன்று பெருமாளுக்கு சாற்றப்படுவது வழக்கம்.
அதேபோல், இந்த ஆண்டும் திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் 5 ம் திருநாள் கருடசேவை நடைபெற உள்ளது. கருடசேவையில் இருக்கும் மலையப்பசாமி எனப்படும் பெருமாளுக்கு சாற்றபடுவதற்காக ஸ்ரீ ஆண்டாளுக்கு சாற்றிய மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவைகள் திருப்பதி புறப்பட்டு சென்றது.
முன்னதாக இன்று 17 ம் தேதி
காலை முதல் ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன. திருக்கோயில் வளாகத்திலேயே பிரத்யோக மலர்கள் கொண்டு மாலை மற்றும் கிளி தயாரிக்கும் பணி காலை முதல் நடைபெற்று பிற்பகலில் நிறைவுபெற்று ஸ்ரீ ஆண்டாளுக்கு சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து ஸ்ரீ ஆண்டாள் சூடிகொடுத்த மாலை, கிளி மற்றும் பரிவட்டம் ஆகியவைகள் திருகோயிலின் ஸ்தானிகர் பெற்றுக்கொண்டு நான்கு மாடவீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கார் மூலம் திருப்பதி புறப்பட்டு சென்றது. இந்நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் சௌ. சக்கரையம்மாள் கண்காணிப்பாளர் அர்ஜீன் மற்றும் உள்ளூர் வெளியூரைசார்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சார்பாக சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது.
செய்திகள் : தேவதர்ஷினி / எதிரொலி / 8939476777
