பொன்னேரி அடுத்த பஞ்செட்டி வேலம்மாள் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி முதல்வர் முனைவர் என் பாலாஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில், சிறப்பு அழைப்பாளர்கள் யுனிக் ஷிப்ட் வெண்டர்ஸ் தலைமை செயல் அதிகாரி கணேஷ் திருநாவுக்கரசு எல்டிஎம் நிறுவனத்தின் இயக்குனர் விஜய் மோகன் கலந்துகொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினர் பின்னர் பல்கலைக்கழக தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு 13,30.300 ரூபாய் கல்வி ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது.

விழாவில், நிறுவனத் தலைவர் எம் வி முத்துராமலிங்கம், கல்லூரி இயக்குனர் எம்.வி.எம்.சசிகுமார், வேலம்மாள் மருத்துவமனை இயக்குனர், சந்தோஷ் குமார், துணை முதல்வர் டாக்டர் சௌந்தர்ராஜன் கல்லூரி ஆலோசர்கள் ரசாக்,வாசு,துறை தலைவர் பாலமுருகன், நூலகர் முருகன் மற்றும் பல்வேறு துறைகளின் தலைவர்கள் மற்றும் பணியாளர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்திகள் : பழவை முத்து / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *