ரோட்டரி கிளப் ஆப் சேலம் பீனிக்ஸ் மற்றும் சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை, சேலம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் சேலம் அழகாபுரம் மிட்டாபுதூர் ஹார்ட்புல்னஸ் தியான மையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு ரோட்டரி கிளப் ஆப் சேலம் பீனிக்ஸ் தலைவர் பூபேஷ், செயலாளர் பிரபு, சேவை திட்ட தலைவர் சந்துரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முகாமில் கண்புரை சம்பந்தமான நோய்கள், கண் விழித்திரை பரிசோதனை, கிட்டப் பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து போன்ற பார்வை குறைபாடுகளுக்கு பரிசோதனை செய்து குறைந்த விலையில் அதே இடத்தில் கண் கண்ணாடி வழங்கினார்கள்.
காலை 8.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.


சேலம் செய்தியாளர் : கா.தங்கதுரை/ 9442979457 / எதிரொலி / 8939476777
