கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம், எலத்தகிரி அருகே உள்ள மேல் காத்தாடிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கோவிந்தசாமி நாயுடு. இவர் சம்பவத்தன்று தனது நிலத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது அவரின் நிலத்தின் வழியாக சென்ற உயர் மின் அழுத்த கம்பி அறுந்து கோவிந்தசாமி நாயுடு மீது விழுந்து உள்ளது. இதில் விவசாயி கோவிந்தசாமி நாயுடு சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் உடனடியாக கந்திகுப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்,

பின்னர் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த கோவிந்தசாமி நாயுடுவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கந்திகுப்பம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்,

தன்னுடைய விவசாய நிலத்திற்கு சென்ற கோவிந்தசாமி நாயுடு மீது மின்கம்பி அறுந்து விழுந்த இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகள் : மாருதி மனோ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed