கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதியில் போட்டியிட அகில இந்திய காங்., கமிட்டி தேசிய செயலாளர் செல்லகுமாருக்கு மீண்டும் ‘சீட்’ வழங்கப்பட்டதை கண்டித்து அக்கட்சியினர் போர்கொடி தூக்கி உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்
அக.கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச்செயலாளர் ஏகம்பவாணன் மற்றும் முன்னாள் மாவட்ட காங்., தலைவர்களான சுப்பிரமணியன், ராஜாகுமாரவேல், நாராயண மூர்த்தி, மாவட்ட துணை தலைவர் ரஹமதுல்லா உள்ளிட்ட காங்., நிர்வாகிகள் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்து, பேட்டி அளித்தனர்.
அப்போது அவர்கள் பேசுகையில்…

கிருஷ்ணகிரி தொகுதியில் தொடர்ந்து வெளியூர்காரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவதால், மக்கள் கோரிக்கை நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது. கடந்த, 1981 முதல் 45 ஆண்டுகளாக உள்ளூர் காரர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என கேட்டு வருகிறோம். ஆனால், வெளியூர் காரரான செல்லகுமாருக்கு காங்., தலைமை, 7 முறை ‘சீட்’ வழங்கி, 3 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். 4 முறை தோல்வி பெற்றார். அவர், கட்சி தொண்டர்களுக்கு எதுவும் செய்யவில்லை. எனவே உள்ளூர் வாசிகள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் மக்களுக்கு நன்மை கிடைக்கும். இது போன்ற நபர்கள் ராகுலையும் கட்சியும் பலவீனப்படுத்துகின்றனர்.

இதனால் செல்லகுமார் அவருக்கு ‘சீட்’ வழங்கியது ஏற்க முடியாது. லோக்சபாவை தவிர்த்து சட்டசபை தேர்தலிலும் வெளியூர் காரர்களுக்கு சீட் வழங்குவதில் என்ன நியாயம். இன்னும், 24 மணி நேரம் அவகாசம் உள்ளது. அதற்குள் வேட்பாளரை மாற்றி உள்ளூர்வாசிகளை அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து யோசித்து அடுத்தகட்ட நடவடிக்கையை கூறுவோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.

செய்திகள் : மாருதி மனோ . எதிரொலி / 8939476777

கிருஷ்ணகிரிக்கு வருகை தரும் காங்கிரஸ் சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் செல்லக்குமாருக்கு கூட்டணி கட்சியின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது...

கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை ஆகிய இரு சட்ட மன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டது, இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே கிருஷ்ணகிரி சட்ட மன்றத் தொகுதிக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் செல்லக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து கிருஷ்ணகிரி நகருக்கு வரும் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் செல்லக்குமாருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப்பகுதியில் இந்திய கூட்டணி கட்சியில் இடம் பெற்றுள்ள திமுக, காங்கிரஸ், தேமுதிக, விடுதலை சிறுத்தை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், இஸ்லாமிய கட்சிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது தீர்மானிக்கப்பட்டது,

அப்போது மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஹரிஸ்பாபு,
கிருஷ்ணகிரி முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் முபாரக் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் துரை எந்த துரைசாமி, மாவட்ட போதுக்கு குழு உறுப்பினர் ம உமர்ஜி,பர்கூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் ஆடிட்டர் வடிவேல், கலைப்பிரிவு மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, மேற்கு மாவட்ட இணைஞர் அணி தலைவர் ரகுமான், முன்னாள் இளைஞர் அணி பொதுச் செயலாளர் விக்னேஷ், மாவட்ட துணைத் தலைவர் விவேகானந்தன், சேவா தள மாவட்ட தலைவர் தேவராஜ், மேற்கு மாவட்ட இணைஞர் காங்கிரஸ் தலைவர் அணில் குமார், மாவட்ட செயலாளர் ஹரி, தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்டத்தலைவர் கமல கண்ணன், டைட்டான் ஜான், பாண்டுரங்கன், வழக்கறிஞர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

செய்திகள் : மாருதி மனோ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed