சூளகிரி அருகே நடந்த, தட்சிண திருப்பதி கோவில் தேரோட்டத்தை, மூன்று மாநில பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே, கோபசந்திரத்தில், நூற்றாண்டு கால பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற தட்சிண திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக இன்று ஸ்ரீவாரி அபிஷேகம், ஊஞ்சல் உற்சவம், தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. பலவித வண்ண மலர்களால் அலங்கரித்த உற்சவமூர்த்திக்கு சிறப்பு பூஜை நடந்தது.

தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையாளர் ராமுவேல், தக்ஷிண திருப்பதி வெங்கட்ரமண சுவாமி கோயில் அறங்காவலர் குழு தலைவர் நாராயணசாமி, ஜே ஆர் குடும்பத்தைச் சேர்ந்த சுபாஷ் மற்றும் சரத், வெங்கடேஸ்வரா சுவாமி சேவா குழு உறுப்பினர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

முக்கிய வீதியில் வலம் வந்த தேர், மீண்டும் நிலையை அடைந்தது. தமிழகம், கர்நாடகா, ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் முன்பு பூஜை செய்து வழிபட்டனர்.

செய்திகள் : மாருதி மனோ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *