மனித வாழ்வு சிறக்க கல்வி அவசியம்…
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழக கடலியல் மற்றும் கடலோரவியல் துறையினர் இணைந்து நடத்தும் உயர்கல்விக்கான வழிகாட்டல் முகாம் நடைபெற்றது.
இம்முகாமிற்கு, தொண்டி அழகப்பா பல்கலைக்கழக கடலியல் மற்றும் கடலோரவியல் துறைத் தலைவர் பேராசிரியர் ரவிக்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் லியோன், திருவாடானை நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் தனபால் முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

கல்லல் வட்டாரக் கல்வி அலுவலர் ஜோசப் ஆண்டோ ரெக்ஸ், பணி நிறைவு தலைமையாசிரியர் மாணிக்கம் உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினர். சிவகங்கை மாவட்ட அரசு மாதிரிப்பள்ளி தலைமையாசிரியர் காளிதாஸ், இராமநாதபுரம் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி ஆசிரியர் முத்துகுமார் உள்ளிட்டோர்கள் மாணவர்களுக்கான வழிகாட்டல் முகாமை வழிநடத்தி, மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில துணைத் தலைவர் காந்தி நிறைவுரை வழங்கினார்.நிறைவாக தமிழ்நாடு அறிவியல் இயக்க திருவாடானை வட்டாரச் செயலாளர் போது ராஜா நன்றி கூறினார்.மாவட்ட நிர்வாகி பிரியங்கா நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். முகாமில் சுமார் 200 க்கும் மேற்பட்ட 10,11,12ம் வகுப்புகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பைல், நோட்டு, பேனா, குளிர்பானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகிகள் நவனீதகிருஷ்ணன், கணேசன், பரமேஸ்வரன், வின்சென்ட் வீரு, சசிக்குமார், ஜெரோம், கல்பனா மற்றும் திருவாடானை கிளை நிர்வாகிகள் காளிமுத்து, ஜெகதீஷ் குமார், தமிழரசி உள்ளிட்டோர்கள் செய்திருந்தனர்.
