தமிழக முதல்வர் அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை மற்றும்
ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் உள்ளிட்டவைகள் வெற்றியைத் தேடித் தரும் தொகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதற்காக மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக எண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறினார்.


சோழவந்தான் தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்ற கேள்விக்கு ;
இது குறித்து, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருகின்ற காலகட்டத்தில் அரசு தொழிற் கல்லூரி அல்லது அரசு ஆர்ட்ஸ் காலேஜ் இரண்டில் ஏதாவது ஒன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.


அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை செயல்படாதது
குறித்த கேள்விக்கு;
கடந்த 2006 முதல் 2011 வரை சோழவந்தான் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த தற்போதைய அமைச்சர் மூர்த்தி அவர்கள் அரசிடம் 110 கோடி பெற்று தந்தார். ஆனால், அதற்கு பின்பு வந்து அதிமுக அரசு போர்டு ஒன்றை அமைத்து அதை முறையாக செலவழிக்காத காரணத்தால் சர்க்கரை ஆலை திறப்பதில் பல்வேறு தாமதங்கள் ஏற்பட்டுள்ளது.


இந்த முறை கழக ஆட்சி அமைந்த உடன் சர்க்கரை ஆலை திறப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் கடந்த காலங்களில் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற பின்பு புதிய பணியாளர்களை நியமிக்க கடந்த அதிமுக ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பணியாளர்கள் பற்றாக்குறையின் காரணமாகவும் சர்க்கரை ஆலை தொடர்ந்து செயல்படுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. அதனையும் சரி செய்து சர்க்கரை ஆலை தொடர்ந்து செயல்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.
செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777
