திருவள்ளூர் மாவட்டத்தில் பனை சார்ந்த தொழில்களை இந்த மாவட்ட மக்களுக்கு உருவாக்கி கொடுக்க வேண்டும் எனவும், அதனால் இந்த மாவட்டத்தில் கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய பெண்களுக்கு தற்சார்பு பொருளாதார வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் எனவும், திருவள்ளூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக்கு மாற்றாக, மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலும், தொலைநோக்கு பார்வையுடன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் அவர்கள், முதல் கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 1,000 பெண்களுக்கு பனை ஓலையில் கைவினை பொருட்கள் செய்வதற்கு பயிற்சி வழங்க முயற்சி மேற்கொண்டார்.

அதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர் ஜெயக்குமார் அவர்கள் பனை ஓலை பயிற்சி முகாம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தார். அதன் மூலாம், முதல் பனை ஓலை பொருட்கள் செய்வதற்கான பயிற்சி முகாமை, கடம்பத்தூரில் கடந்த பிப்ரவரி 20ம் தேதி மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்து பயிற்சிக்கு வந்திருந்த பெண்களுக்கு பயிற்சி குறித்த அறிவுரைகளையும் வழங்கினார்.

அதனை தொடர்ந்து, மீஞ்சூர் ஒன்றியம் அனுப்பம்பட்டு ஊராட்சியில், இரண்டாவது பனை ஓலை பயிற்சி முகாமை மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி அவர்கள் துவக்கி வைத்தார். இந்த இரண்டு பயிற்சி மையத்திலும் 65 பேர் பயிற்சி பெற்றனர். இந்த பயிற்சி மத்திய பனைப்பொருள் மற்றும் பனை பொருள் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக வழங்கப்பட்டது. கடைந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்புகள் தற்போது நிறைவடைந்தது.

இந்த நிறைவு நாள் நிகழ்ச்சி அனுப்பம்பட்டு பயிற்சி மையத்தில் நடைபெற்றது. அதில், மத்திய பனைப்பொருள் மற்றும் பனை பொருள் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் முதல்வர் பிரபாகரன் பயிற்சி ஆசிரியர்கள் சரஸ்வதி, அனிதா ஆகியோர் இந்த பனை ஓலை பயிற்சியின் முக்கியத்துவத்தை பற்றியும், எதிர்காலத்தில் இந்த பயிற்சியின் மூலம் இந்த பயிற்சியை பெற்றவர்கள் தயார் செய்யக்கூடிய பொருட்களை சந்தைப்படுத்துவது உள்ளிட்ட ஆலோசனைகளையும் வழங்கினர்.

அதற்கு முந்தைய நாள் பயிற்சி வகுப்பிற்கு வந்திருந்த இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் பயிற்சி பெற்ற பெண்களுக்கு, உபகரண பொருட்களை வழங்கி, இந்த பயிற்சியை பெற்று அதன் மூலம் பனை ஓலை பொருட்களை தொடர்ந்து செய்து, நீங்கள் தற்சார்பு பொருளாதார வசதி பெறுவதற்கு, எங்கள் மக்கள் நலப்பணி இயக்கம் உங்களுக்கு என்றும் துணையாக இருக்கும் என உறுதியாளித்தார்.

எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed