சோழவந்தான் தனி தொகுதியில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாண்புமிகு சின்னம்மா அவர்களின் ஆசி பெற்ற வெற்றி வேட்பாளர் மருத்துவர் பாலமுருகனுக்கு தொகுதி முழுவதும் பொதுமக்கள் பெண்கள் உற்சாக வரவேற்பு வழங்கி வருகின்றனர்.
சோழவந்தான் பேரூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட மருத்துவர் பாலமுருகன் பூ மேட்டு தெரு, மேலரத வீதி தெற்கு ரத வீதி பள்ளிவாசல் தெரு, வேளார் தெரு நாடார் தெரு, சப்பாணி கோவில் தெரு கீழப்பச்சேரி மேலப்பச்சேரி ஆர் எம் எஸ் காலனி பத்மா கார்டன் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை முதல் பிரச்சாரம் மேற்கொண்டார் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட14.15 16 17 18 ஆகிய வார்டு பகுதிகளான கீழப்பச்சேரி மேல பச்சேரி பகுதிக்கு வருகை தந்த கழக வேட்பாளர் மருத்துவர் பாலமுருகனுக்கு 1000க்கும் மேற்பட்ட பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஆலுயர மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் கும்ப மரியாதை அளித்து குலவை போட்டும் மலர்கள் தூவியும் கழக வேட்பாளர் மருத்துவர் பாலமுருகனுக்கு வரவேற்பு அளித்தனர் சில பெண்கள் தங்களின் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும்படி கேட்டுக் கொண்ட நிலையில் மாண்புமிகு அம்மா பெயர் மாண்புமிகு சின்னமா பெயர்களை சூட்டி அவர்களை வாழ்த்தினார் தங்கள் குழந்தை பிறந்து ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு மருத்துவர் பாலமுருகனே காரணம் என நெகிழ்ச்சியுடன் சில பெண்கள் கூறினார்கள் தென்னந்தோப்பு சின்னத்திற்கு அனைவரும் வாக்களித்து மருத்துவர் பாலமுருகனை வெற்றி பெறச் செய்வதுடன் கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு சின்னம்மா அவர்களின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பினர்.

மேலும் சோழவந்தான் பகுதியில் முக்கிய பிரமுகர்கள் சமுதாய அமைப்புகள் வணிகர்கள் வியாபாரிகள் பொதுமக்கள் என அனைவரும் மருத்துவர் பாலமுருகனுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்ததுடன் சால்வை அணிவித்தும் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்தனர் பல்வேறு பகுதிகளில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் மருத்துவர் பாலமுருகனுக்கு சோழவந்தான் பேரூர் பகுதியில் அதிக வாக்குகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அந்த பகுதி பொதுமக்கள் வாக்காளர்கள் கூறிச் சென்றனர்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி / 8939476777
