கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் இந்திய கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளருமான டாக்டர் செல்வகுமார் கை சின்னத்தில் போட்டியிட்டுள்ளார். இதனை அடுத்து கூட்டணி கட்சினர்களுடன் கிருஷ்ணகிரி சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்பம்பள்ளி, பாரூர், பூசாரிப்பட்டி மோகனப்பள்ளி, தண்டேகுப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த பிரச்சாரக் கூட்டத்தின் போது கர்நாடகா மாநில போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி கலந்துகொண்டு கிருஷ்ணகிரி காங்கிரஸ் சட்டமன்ற வேட்பாளர் டாக்டர் செல்லகுமாரை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிப் பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும் தமிழத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நல்ல ஆட்சி செய்து வருகிறார், இதில் தமிழத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் கர்நாடக மாநிலத்திலும் செயல்படுத்தி வருகிறோம். குறிப்பாக மோடி அனைவரது வங்கி கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் வழங்குவதாக கூறினார், ஆனாலும் இதுவரை நாட்டு மக்களுக்கு அந்த பணம் கொடுக்காமல் ஏமாற்றி உள்ளார். அது போல மோடியின் வெற்று வாக்குறுதி போல அதிமுகவும் மக்களுக்கு பெற்று வாக்குறுதிகளை அறிவித்து உள்ளது. இதனை நம்பாமல் கை சின்னத்தில் போட்டியிட்டுள்ள காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் செல்லகுமார் வெற்றி பெற்றால் தமிழகத்தில் மீண்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான நல்லாட்சி மலரும் என்று குறிப்பிட்டார்.

அப்போது கிருஷ்ணகிரி கிழக்கு திமுக செயலாளர் நாராயணன், மாவட்ட துணைச் செயலாளர் கோவிந்தசாமி, திமுக பொதுக் குழு உறுப்பினர் சந்திரசேகரன், காங்கிரஸ் கட்சியின்மாவட்ட துணைத் தலைவர் பி சி சேகர், மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசு, பருகூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் ஆடிட்டர் வடிவேல், வட்டார தலைவர் நாராயணசாமி, முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் முபாரக், ஒன்றிய திமுக துணைச் செயலாளர் ஆனந்தன், மற்றும் திமுக கட்சி சேர்ந்த ராமச்சந்திரன், சரவணன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்துக் கொண்டனர்.

செய்திகள் : மாருதி மனோ எதிரொலி / 8939476777
