ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் ஸ்ரீமுத்தால பரமேஸ்வரியம்மன் கோவில் பங்குனித் திருவிழா கடந்த 23-ந்தேதி காப்பு கட்டுதலும், 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து, 2-ம் நாள் திருவிழாவாக பாரதிநகர் ஆயிரவைசியர்கள், பொதுமக்கள் இணைந்து 24-ம் ஆண்டு 2-ம் நாள் நிகழ்ச்சியை கோலாகலமாக நடத்தினர்.
முன்னதாக, பாரதிநகர் ஆயிரவைசியர் நலச்சங்கத்தினர்கள், மகளிர்கள் ஸ்ரீ முத்தாலம்மன் கோவிலில் இருந்து வெள்ளி சிங்கம் வாகனத்தில் வீற்றிருந்த முத்தாலம்மனை பெரிய கடைவீதி, மீன் மார்க்கெட் பகுதி, பூக்கடை பஜார், நகைக்கடை பஜார், காந்தி சிலை பகுதி, கொல்லம்பட்டறை தெரு, தேசிய நெடுஞ்சாலை வழியாக ஐய்யப்பன் கோவில், முருகன் கோவில் சென்றடைந்து பாரதிநகர் மண்பகப்படிக்கு வந்து அங்கு கூடியிருந்த பெருந்திரளான பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தார்.
மண்டகப்படிக்கு வருகை தந்து சிறப்பித்த பரமக்குடி நகராட்சித் தலைவர் சேது கருணாநிதி, ஆயிர வைசிய சபை தலைவர் எஸ்.பாலுச்சாமி, இணைத் தலைவர் ராசி என் .போஸ் , துணைத் தலைவர்கள், செயலாளர் எஸ். கே.பி. இலெனின்குமார், பொருளாளர் ஏ.ஆர்.சுப்பிரமணியன், துணைத்தலைவர்கள், சபை நிர்வாகிகள், நியமன உறுப்பினர்கள் உள்பட ஸ்ரீமீனாட்சி - சுந்தரேஸ்வராள் - ஸ்ரீ முத்தாலம்மன்கோவில் டிரஸ்டிகள் அம்பலம் மு.வா.பா ஜெயராமன், மேனேஜிங் டிரஸ்டி ந.அ.சி. ந. சோ.பாலசுப்பிரமணியன், நகர் முக்கிய பிரமுகர்களை

வரவேற்று சிறப்பித்தனர்.
தொடர்ந்து, அம்பாள் பாரதிநகர் முழுவதும், வசந்தபுரம், சுப்பிரமணியபுரம், பாசிபவளகாரத்தெரு,முகமது அலி தெரு உள்பட நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தார்.
நகர்வலம் வந்த அம்பாளுக்கு வீட்டிற்கு முன்பு தேங்காய் உடைத்து தரிசனம் செய்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை பாரதிநகர் ஆயிர வைசியர் நலச்சங்கத் தலைவர் ஜெபிஎஸ்.மணிவண்ணன் தலைமையில் கெளரவத் தலைவர்கள் பி.சந்திரபோஸ், பி.உதயக்குமார், எஸ்.கே. ராம்தாஸ் , துணைத் தலைவர்கள் எம். கண்ணன், சாஸ்தா எஸ்.இராமநாதன், விபி என்.சரவணன், பி.முத்துக்குமார், பொருளாளர் ஜெபிஎஸ் தமிழ்ச்செல்வன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கே.என்.முருகேசன். ஜெ.சூரியமூர்த்தி, எம்.தாமோதரன், டி.ராமமூர்த்தி, ஜெ.வெங்கடசுப்பிரமணியன் , டி.சதீஷ்குமார், வி. சிவா, மாமு ஜெயக்குமார் உள்பட நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மகளிர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

செய்திகள் : மாமுஜெயக்குமார்
மாவட்ட செய்தியாளர் எதிரொலி / 8939476777
