நன்றி தெரிவிக்க விஜய் அழைப்புக்காக காத்துள்ளோம் ; பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார்:

ஆசிரியர்கள் பணிநிரந்தரம், மீண்டும் பழைய ஓய்வூதியம் போன்றவற்றை தேர்தல் வாக்குறுதியாக தவெக தலைவர் விஜய் அறிவித்ததை வரவேற்பதாக தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இது குறித்து அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அறிக்கையில் கூறியது :

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் தற்காலிக வேலையில் 15 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்கள் செய்து வருகின்றார்கள். தற்போது 15 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் தவெக தலைவர் தேர்தல் வாக்குறுதியில் 5 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகமாக பணிபுரிகின்ற தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை சம்பளம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் மகிழ்ச்சியாக வரவேற்கப்படுகிறது. அதுபோல மீண்டும் பழைய ஓய்வூதியம் கொண்டு வரப்படும் என்ற தவெகவின் அறிவிப்பும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஆனந்த அறிவிப்பாக உள்ளது.

திமுக, அதிமுக இது போன்ற வாக்குறுதிகளை இந்த தேர்தலில் அறிவிக்காத நிலையில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் மீண்டும் பழைய ஓய்வூதியம், ஆசிரியர்கள் பணி நிரந்தரம் அறிவித்து இருப்பது தமிழ்நாட்டில் அனைத்து தரப்பிலும் பெருமையாக பேசப்படுகிறது. நீண்ட காலமாக ஏமாற்றத்தில் இருந்த பகுதிநேர ஆசிரியர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குறுதி ஆறுதலை அளிக்கிறது.

தற்காலிக ஆசிரியர்களாக பணிபுரிகின்ற பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ள தவெக தலைவர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.

எனவே, தவெக தலைவர் விஜய் அவர்கள் அனுமதிக்காக காத்துள்ளோம்.


S.செந்தில்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு, / 9487257203

எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed