மதுரை மாவட்டம் வாடிப்பட்டிஅருகே உள்ள குட்லாடம்பட்டி கிராமத்தில் பொது கோவிலான முத்தாலம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் ஒரு பிரிவினர் வழிபட எதிர்ப்பு கிளம்பியதாக கூறப்படுகிறது. இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தனியாக கோவில் கட்ட முடிவு செய்து கிராம மந்தையில் கோவில் கட்ட பெண்கள் கடப்பாறை மண்வெட்டியுடன் வந்து கோவில் கட்டுவதற்கான பணியை மேற்கொள்ள திரண்டதால் பரபரப்பானது.

இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சம்பவ இடத்திற்கு போலீசார் குவிக்கப்பட்டனர்

பின்னர் போலீசார் இரு தரப்பினரையும் காவல்நிலையம் அழைத்து சென்று அமைதி கூட்டம் நடத்த முற்பட்டனர். இதனிடையே அனைவரும் கோவிலில் வழிபடலாம் என போலீசார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதனையறிந்த பெண்கள் திடீரென காவல்நிலையத்தை முற்றுகையிட்டு தனியாக எங்கள் பிரிவினருக்கு கோவில் கட்ட அனுமதியளிக்க வேண்டும் எனக் கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பானது. வாடிப்பட்டி போலீசார் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்

செய்திகள் : காளமேகம் / மதுரை எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed