தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ந் தேதி நடைபெற இருப்பதை முன்னிட்டு, ராமநாதபுரம் பரமக்குடி உட்கோட்ட காவல் நிலைய சரங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதும் ஏற்படாமல் நேர்மையான முறையில் அமைதியாகவும், மக்கள் அச்சமில்லாமல் வாக்குப்பதிவு செய்யவும், வாக்கு எண்ணிக்கை நடைபெறவும், பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், தேர்தலின் போது பிரச்சனைகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பரமக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் எம். ஜெபராஜ் தலைமையில், துணை ராணுவப் படையினர், சார்பு ஆய்வாளர்கள் குண்டு , மிஸ்ரா, உதவி சார்பு ஆய்வாளர்கள், ஆண் காவலர்கள் பெண் காவலர்களும்.
பரமக்குடி உட்கோட்ட காவல் நிலையங்களைச் சேர்ந்த காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் , காவல் ஆளினர்கள் காவல் அணிவகுப்பு பரமக்குடி ஐந்து முனை பகுதியில் உள்ள தனியார் திருமண மகாலில் இருந்து புறப்பட்டு ஐந்து முனை பகுதி, தேசிய நெடுஞ்சாலை, ஆர்ச் பகுதி, பஸ்நிலையம், சந்தைப்பேட்டை, தீயணைப்பு நிலையப் பகுதி வரை கொடி அணிவகுப்பு சிறப்பான முறையில் நடைபெற்றது.
அணிவகுப்பில் காவல்
வாகனங்கள் எச்சரிக்கை ஒலியுடன் முன்செல்ல தொடர்ந்து அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
