சிதம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் நேற்றிலிருந்து இன்று வரை பல மணி நேரம் யூஎஸ்ஜி ஸ்கேன் எடுப்பதற்கு காத்திருக்கும் அவல நிலை அமர கூட நாற்காலிகள் இல்லாமல் நூற்றுக்கணக்கான நோயாளர்கள் காத்திருப்பதாக பொதுமக்கள் குற்றசாட்டு,
சிதம்பரம் அண்ணாமலை நகரில் அமைந்துள்ளது கடலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இந்த மருத்துவமனைக்கு மயிலாடுதுறை மாவட்டம், கள்ளக்குறிச்சி, விருதாச்சலம், காட்டுமன்னார்கோவில், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான உள்நோயாளிகள் வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர்.


இந்த மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மருத்துவ உபகரணங்கள் இல்லாததால், இங்கு வரும் நோயாளிகளை பாண்டிச்சேரி தஞ்சாவூர் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில்.
மருத்துவமனை வளாகத்தில் உள்ள, யூ.எஸ்.ஜி ஸ்கேன் சென்டர் கேளா ஒலி அலகிட்டு அறை உள்ளது. இங்கு வரும் நோயாளிகள் பல்வேறு சிகிச்சைக்காக வரும் நிலையில் அவர்களுக்கு ஸ்கேன் செய்வதற்கு இங்கு தான் அனுப்பப்படுகிறார்கள்.

ஆனால், அங்கு போதிய மருத்துவர்கள் ஆள் பற்றாக்குறை இருப்பதால் ஸ்கேன் எடுக்க வரும் பொது மக்களை பல மணி நேரம் காத்திருக்க கூடிய சூழல் நிலவி வருகிறது.
நேற்று காலை 8 மணிக்கு வந்த நோயாளிகளை இன்று காலை 8 மணிக்கு வாருங்கள் என கூறியதாகவும், ஆனால் வந்து பல மணி நேரம் ஆகியும் அவர்களுக்கு ஸ்கேன் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த அறையின் முன்பு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நோயாளிகள் காத்திருக்கக் கூடிய சூழல் ஏற்பட்ட நிலையில் அவர்கள் அமரக்கூட நாற்காலிகள் இல்லை என அங்கு இருக்கும் பொதுமக்கள் நோயாளிகள் கடும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.


ஆகவே, மருத்துவமனை நிர்வாகமும் சுகாதாரத்துறை அதிகாரிகளும், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் காத்திருக்க கூடிய வகையில் அறைகள் தயார் செய்து நாற்காலிகள் போட வேண்டும் எனவும், தரையில் அமர்ந்திருக்க கூடிய சூழல் இனிமேல் நிலவ கூடாது எனவும் கோரிக்கை வைக்கும் பொதுமக்கள் தெரிந்தவர்களுக்கு உடனடியாக ஸ்கேன் எடுத்து வெளியே அனுப்புவதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

எதிரொலி / 8939476777
