மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முன்பு, பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அனுமதியின்றி ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட வாலிபர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நேற்று மாலை சுமார் 6 மணி அளவில், திருப்பரங்குன்றம் சட்டம் & ஒழுங்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சிவப்பிரகாசம் தலைமையிலான காவல்துறை குழுவினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கோபுரத்தின் முன்பு ஒரு நபர் எவ்விதமான அனுமதி இன்றி ட்ரோன் கேமராவை பறக்கவிட்டுக் கொண்டிருந்ததை அதிகாரிகள் கவனித்தனர்.

திருப்பரங்குன்றம் மலையை சுற்றி ட்ரோன் பறக்க விடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதால் அந்த நபரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். விசாரணையில் அவர் மதுரை மேற்கு மாசி வீதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகன் சக்திவேல் (வயது 28) என்பது தெரியவந்தது இதனைத் தொடர்ந்து சக்திவேல் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். திருப்பரங்குன்றம் மலை மீது ட்ரோன் பறக்க விட்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

செய்திகள் : காளமேகம் / மதுரை எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed