பெரம்பலூர் நாரணமங்கலம் ஆலந்தூர் தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பிரியதர்ஷினி தலைமை வகித்தார். நிலைய பயிற்சி அலுவலர் தெய்வ ராஜா, ஒருங்கிணைப்பாளர் பிரேம்குமார், அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்புக் கழக மாநில அமைப்பாளர் ராஜன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் ன, தன்னார்வலர் மார்கண்டன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் மாநில தலைவரும் மாவட்ட நுகர்வோர் உறுப்பினருமான கதிரவன் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து எடுத்துரைத்தார். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய தமிழ்நாடு உறுப்பினர் சிவசங்கர சேகரன் பேசுகையில்,
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India (TRAI), இந்தியாவில் செயல்படும் அனைத்துத் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.

இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையச் சட்டம், 1997இன் படி, இந்தியத் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சேவைகளையும், கட்டணங்களையும் ஒழுங்குபடுத்த, பிப்ரவரி 20, 1997ஆம் ஆண்டில் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தொடங்கப்பட்டது.தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் ஒரு தலைவரும், இரண்டு முழு நேர உறுப்பினர்களும், இரண்டு பகுதி நேர உறுப்பினர்களும் கொண்டுள்ளது. ஆணைய முடிவுகளைச் செயல்படுத்த ஒரு முழு நேர செயலர் தலைமையில் செயலகம் செயல்படுகிறது.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் (TRAI) பதிவுசெய்யப்பட்ட நுகர்வோர் ஆலோசனைக் குழுவாக குடிமக்கள் நுகர்வோர் மற்றும் குடிமை நடவடிக்கைக் குழு (CAG) உள்ளது. TRAI உடன் இணைந்து, CAG தமிழ்நாடு முழுவதும் தொலைத்தொடர்பு சேவைகள் குறித்த நுகர்வோர் விழிப்புணர்வு அமர்வுகளை நடத்துகிறது.TRAI இன் நுகர்வோர் விதிமுறைகள், குறை தீர்க்கும் வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் மற்றும் சைபர் மோசடிகளைப் புகாரளிக்கும் வழிகள் குறித்து நுகர்வோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில், தொகுதி அளவில் கவனம் செலுத்தப்படும் இந்த முயற்சி, அடிமட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்கிறது.

இந்த ஆண்டு, CAG தமிழ்நாட்டில் TRAI சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்துகிறோம். தொலைத்தொடர்பு சேவைகள் குறித்த விழிப்புணர்வு மிக முக்கியமானது, ஏனெனில் அதிகரித்து வரும் மொபைல் பயன்பாடு மற்றும் விரைவான டிஜிட்டல் மாற்றம் ஆகியவை நுகர்வோரை டிஜிட்டல் மோசடி, மோசமான சேவை தரம், மறைக்கப்பட்ட கட்டணங்கள் மற்றும் அவர்களின் உரிமைகள் மற்றும் குறை தீர்க்கும் வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை ஆகியவற்றால் நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர். வளர்ந்து வரும் சைபர் அச்சுறுத்தல்கள், வளர்ந்து வரும் ஆன்லைன் மோசடிகள் மற்றும் ஸ்பேம் அழைப்புகளின் அதிகரிப்பையும் எதிர்கொள்கிறது – பல சைபர் குற்றங்களுக்கு வழிவகுக்கிறது. இதுபோன்ற தாக்குதல்களின் அதிகரித்து வரும் ஆபத்து குறித்து தமிழ்நாடு சைபர் குற்றப் பிரிவு எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.இந்தச் சவால்கள் குறித்தும், ஒழுங்குமுறை ஆணையத்தால் வெளியிடப்பட்ட பல்வேறு நுகர்வோர் விதிமுறைகள் குறித்தும் நுகர்வோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI), நுகர்வோர் ஆலோசனைக் குழுக்கள் மூலம் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த முயற்சிகள் நுகர்வோர் டிஜிட்டல் துறையில் தகவலறிந்தவர்களாகவும், பாதுகாப்பாகவும், உறுதியுடனும் இருக்க வாய்ப்பாக அமையும். தொலைந்த அல்லது திருடுபோன மொபைலை கண்டுபிடிக்க, www.ceir.gov.in என்ற சஞ்சார் சாதி (Sanchar Saathi) போர்ட்டலில் புகார் அளிக்கலாம். காவல்துறை புகார் எண், IMEI எண்கள், மொபைல் எண் ஆகியவற்றை பயன்படுத்தி, இந்த இணையதளத்தில் தொலைந்த போனை பிளாக் செய்து, அதன் நிலையை கண்காணிக்க முடியும்.
மொபைலை தொலைந்தால் உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்தில் அல்லது Cyber Crime portal மூலம் சைபர் கிரைமில் புகார் அளித்து FIR/DD/GD எண்ணைப் பெறவும். CEIR போர்ட்டலில் (CEIR > Request for blocking lost/stolen mobile) உங்கள் மொபைலை முடக்கலாம். புகார் அளிக்கும் போது மொபைல் ரசீது (Bill), IMEI எண், புகார் நகல், மொபைல் எண் அவசியமாகும்.
கண்டெடுத்த பின் அன்லாக் செய்ய அதே CEIR போர்ட்டலில் ‘Unblock found mobile’ மூலம் அன்லாக் செய்யலாம்.

மொபைலில் do not disturb mode தொந்தரவு செய்யாதே (DND) பயன்முறை, உங்கள் சாதனத்தில் வரும் அனைத்து அழைப்புகள், விழிப்பூட்டல்கள் மற்றும் அறிவிப்புகளை அமைதியாக்கி, குறுக்கீடுகளைத் தடுக்கலாம். குறிப்பிட்ட தொடர்புகளிலிருந்து அழைப்புகளை அனுமதிப்பது அல்லது தானியங்கி, நேரப்படுத்தப்பட்ட அல்லது படுக்கை நேர செயல்படுத்தலை திட்டமிடுவது போன்ற விதிவிலக்குகளை பயனர்கள் தனிப்பயனாக்கலாம் என்றார்.

செய்திகள் : விஜயகுமார் / திருச்சி எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed