தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கின் தீர்ப்பு மார்ச் 23ம் தேதி வெளியாக உள்ளது
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து சாத்தான்குளம் முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் முன்னாள் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் உள்ளிட்ட போலீஸ்காரர்கள் தாக்கியதில் ஜெயராஜ் பென்னிக்ஸ் என்ற தந்தை மகன் உயிரிழந்தனர்.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி வருகிறது
இந்த வழக்கில் குற்றவாளிகளாக கருதப்பட்டு கைது செய்யப்பட்ட முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீஸ்காரர்கள் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வரை ஜாமீன் கேட்டு சென்று இதுவரை ஜாமீன் கிடைக்காமல் மதுரை சிறையிலேயே சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள்
இந்த வழக்கானது மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது
ஐந்து வருடங்களுக்கு மேலாக நடந்து வரும் இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உற்று கவனித்து வருகிறது
இந்த வழக்கின் தீர்ப்பானது மார்ச் மாதம் 23ஆம் தேதி மதுரை மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் வழங்க உள்ளார்
