செங்கோல் ஆதீனம், ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச சத்யஞான தேசிக பிரம்மச்சாரிய சுவாமிகள் தலைமை!

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் உள்ள மக்கள் “உயர்தர இதய மருத்துவ  சிகிச்சை வசதிகளை” நெல்லை அருணா கார்டியாக் கேர் மருத்துவமனையில் பெற முடியும்- இதய நிபுணர் டாக்டர் இ.அருணாசலம் தகவல்!

திருநெல்வேலி மாநகரம் பாளை. வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள அருணா கார்டியாக் கேர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் NIRS IVUS என அழைக்கப்படும் ‘மேம்பட்ட இதய இரத்த நாள படமெடுப்பு தொழில்நுட்பத்தின்’ பிரம்மாண்டத் தொடக்க விழா 103ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ செங்கோல் ஆதீனம், ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச சத்யஞான தேசிக பிரம்மச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.  

இதுகுறித்து அருணா கார்டியாக் கேர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிருவாக இயக்குனர் டாக்டர் சுவர்ணலதா அருணாசலம் முன்னிலையில், மருத்துவமனையின் தலைமை மருத்துவரும், இயக்குநருமான டாக்டர் இ.அருணாசலம் செய்தியாளரிடம் கூறியதாவது: என்.ஐ.ஆர்.எஸ். – ஐ.வி.யூ.எஸ். தொழில் நுட்பமானது இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் கரோனரி இரத்த நாளங்களின் உட்புற அமைப்பையும், அவற்றில் படிந்துள்ள கொழுப்பு படிவங்களின் தன்மையையும் விரிவாக மதிப்பிட உதவும் நவீன மருத்துவ தொழில்நுட்பம் ஆகும்.

இந்த நவீன தொழில்நுட்பம், இதய இரத்த நாள அடைப்புகளின் தன்மையைத் துல்லியமாகப் புரிந்து கொள்ளவும், நோயாளிகளுக்குத் தேவையான சிகிச்சையைத் திட்டமிடவும் இதய மருத்துவர்களுக்கு பெரிதும் உதவுகிறது. இந்த புதிய தொழில்நுட்பத்தை நெல்லை அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை அறிமுகப்படுத்துவதன் மூலம், தென் தமிழக மக்கள் மேம்பட்ட மருத்துவ சிகிச்சை பெற முடியும்.

இத்தகைய அதி நவீன தொழில்நுட்பங்கள் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் உள்ள மக்கள் “உயர்தர மருத்துவ  சிகிச்சை வசதிகளை” நெல்லை அருணா கார்டியாக் கேர் மருத்துவமனையில் பெற முடியும் என்றார், நெல்லை இதய நிபுணர் டாக்டர் இ.அருணாசலம்.

செய்தியாளர் செ.பா.தவசிக்கனி
எதிரொலி.இன் / நெல்லை
கைபேசி எண்: 8825850212

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed