திருநெல்வேலி மாவட்டம் வடக்கு வீரவநல்லூர் ஆவணி மூலவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் எ.சண்முகராஜ். இவர் தனது தந்தையார் பெயரில் செலுத்திவரும் தனது வீட்டு வரி தீர்வையை தனது பெயருக்கு மாற்றம் செய்து தரக்கோரி கடந்த 12.11.2025 அன்று உரிய ஆவணங்களுடன், வீரவநல்லூர் தேர்வு நிலைப் பேரூராட்சி செயல் அலுவலரிடம் விண்ணப்பித்தார். இந்த விண்ணப்ப மனுமீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக வீரவநல்லூர் பேரூராட்சி ஊழியர்களிடம் விசாரித்த போது, அந்த மனுவை யாரிடம் கொடுத்தீர்கள்? எப்போது கொடுத்தீர்கள்? என்று கூலாக கேட்கின்றனர். மேலும் ‘விண்ணப்பப் படிவம் அலுவலகத்தில் இல்லை’ என்றும் கூலாக கூறுகின்றனர்.

இது தொடர்பாக வீரவநல்லூர் பகுதி மக்களிடம் விசாரணை செய்தபோது, வீரவநல்லூர் பேரூராட்சியில் “உரிய வழிவகைகளுடன் விண்ணப்பித்தால் மட்டுமே” பேரூராட்சி அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் இருக்கும். இல்லையென்றால் கோப்புகள் காணாமல் போய்விடும் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை விண்ணப்பங்களை மறைத்து வைத்து தங்கள் சுய லாபத்தை எதிர்பார்த்து அரசு பணியை (தங்களை கவனிக்க வேண்டும் என்று கவனப்படுத்தும் விதமாக) கவனக்குறைவாக செய்யும் வீரவநல்லூர் தேர்வு நிலைப் பேரூராட்சி ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வீரவநல்லூர் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நெல்லை செய்தியாளர்
செ.பா.தவசிக்கனி/ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed