திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள தேவதானம் கவரை பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஶ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் திருக்கோவில் உள்ளது. அந்த கோயில் கடந்த பல வருடங்களாக கும்பாபிஷேகம் செய்யப்படாமலும், சிதிலம் அடைந்த நிலையிலும் இருந்தது. இந்நிலையில் அந்த கோயிலை புனரமைக்க வேண்டும் என கவரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் முடிவெடுத்தனர்.

அதன்படி, அந்த கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவருடைய தீவிர முயற்சியின் காரணமாக, புதிய கோயில் கட்டுவதற்காக குழு அமைக்கப்பட்டு, அந்த கோயிலை இடித்து விட்டு புதியதாக அதே இடத்தில் கோயில் கட்டுவதற்கு முடிவெடுத்தப்பட்டு அதற்கான பணிகள் கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக, புதிய கோயில் கட்டும் பணிகள் நடந்து வந்த நிலையில், தற்போது நிறைவடைந்து அந்த புதிய கோயிலுக்கான, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

நூறாண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் மூலஸ்தானம் உள்ள இடத்தில், அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேஸ பெருமாள், கருடன், விமானம் மற்றும் நாக தேவதை ஆகிய தெய்வங்களுக்கு புதிய ஆலயம் கட்டப்பட்டு அதற்கான கும்பாபிஷேகம் ஏற்பாடு செய்யப்பட்டது.

கும்பாபிஷேக தினமான இன்று மூன்று கால யாக ஓமங்கள் செய்யப்பட்டு யாத்ரா தானத்துடன் கும்ப புறப்பாடு நடைபெற்று அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், பல்வேறு நதியிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா… என்ற கோஷத்துடன் சாமியை வணங்கினர்.


திருவல்லிக்கேணி ஸ்ரீ யோகாஞ்ஜனேய சக்தி பீடம் ஸ்வாமி கண்ணன் பட்டாச்சாரியா
அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை
கவரைப்பாளையம் பொது மக்கள், ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் விழாக்குழுவினர்கள் மற்றும் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்து இருந்தனர்.

செய்திகள் : பழவை முத்து / எதிரொலி / 8939476777
