பல ஆண்டுகளாய் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த சொத்துக்கள் தீ விபத்தின் காரணமாய் ஒரே நிமிடத்தில் அழிந்த சோகம். ஆதரவு கரம் நீட்டிய அன்னை வசந்தம் சமூக நல அறக்கட்டளை.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே உள்ள அண்ணாமலை சேரி மீனவ கிராமத்தில் வசிப்பவர் சுதாகர் என்ற மீனவர், பழவேற்காடு ஏரியில் மீன் பிடித்து தொழில் செய்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் இவர் குலதெய்வ வழிபாட்டிற்காக மேல்மலையனூருக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்கிருந்த அவருக்கு அண்ணாமலைச்சேரி கிராமத்தில் இருந்து தொலைபேசி மூலம் தங்கள் வீடு தீப்பற்றி எரிகிறது என தகவல் வந்துள்ளது.

அதன்படி, அங்கிருந்து உடனடியாக கிளம்பி வந்து பார்த்தபோது சுமார் 7 இலட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் தீப்பற்றி எரிந்து சாம்பலாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தீ பரவி வீட்டில் இருந்த அனைத்து ஆவணங்களும், ஆடைகளும், மின்சார பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சாம்பலாகி தாங்கள் நிற்கதியாகப்பட்டு விட்டோம் என்பதை நினைத்து கதறி அழுதுள்ளனர்.
இதுகுறித்து, திருப்பாலைவனம் காவல் துறைக்கும், வருவாய்த்துறை, வட்டார வளர்ச்சி அலுவலகம் அனைத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர். வசதியுடன் இருந்த தாங்கள் ஒரே நிமிடத்தில் அனைத்தையும் இழந்து அடுத்தவரிடம் கையேந்து நிலைக்கு வந்ததை கண்டு மிகவும் மனமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் தங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனை பத்திரிகை செய்தி மற்றும் மீடியா செய்தி மூலம் பார்த்த பொன்னேரியில் இயங்கி வரும் அன்னை வசந்தம் கல்வியில் சமூக நல அறக்கட்டளை சார்பில் உடனடியாக குடும்பத்திற்கு தேவையான அரிசி, மளிகை சாமான்கள், காய்கறிகள், உடைகள்,சமையல் பாத்திரங்கள், பாய்,பெட்ஷீட், தண்ணீர் குடம்,கை செலவு உள்ளிட்ட முதற்கட்டமாக குடும்பத்திற்கு தேவையான முக்கிய பொருட்களை எடுத்துச் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்து வழங்கினர். இந்த அறக்கட்டளையின் தலைவர் வசந்தகுமார், துணை தலைவர் ஆனந்தி ஆகியோர் வழங்க செயலாளர் கெஜலட்சுமி, பணியாளர் உமாமகேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர். இதனைப் பெற்றுக் கொண்ட பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
செய்திகள் : பழவை முத்து / எதிரொலி / 8939476777
