திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை சிட்கோ தொழிற்பேட்டையில் 20-க்கும் மேற்பட்ட தெருக்களில் 300-க்கும் அதிகமான சிறிய மற்றும் பெரிய தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், தொழிற்பேட்டையின் பல தெருக்களில் பெயர்ப் பலகைகள் இல்லாத நிலை உள்ளது. குறிப்பாக, 1, 2, 4, 5 மற்றும் 13-வது குறுக்குத் தெருக்களின் பெயர்ப் பலகைகளும், முதல் பிரதான சாலையின் பெயர்ப் பலகையும் சேதமடைந்து, பொதுமக்களுக்குத் தெளிவாகத் தெரியாத நிலையில் உள்ளன.

இதனால் தொழிற்சாலைகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள், வாகன ஓட்டிகள், வணிகர்கள் மற்றும் புதிதாக வரும் பொதுமக்கள் தெருக்களைக் கண்டறிவதில் சிரமங்களைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சேதமடைந்த பெயர்ப் பலகைகளைச் சீரமைத்து, பெயர்ப் பலகைகள் இல்லாத தெருக்களில் புதிய பெயர்ப் பலகைகளை அமைக்க வேண்டும் என்பதே தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்திகள் : கோதை ஜெயராமன் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed