திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே ஆசான புதூர் மேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஶ்ரீ செங்கமல வல்லித் தாயார் ஸமேத ஸ்ரீ சென்ன கேசவ பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள ஆசான புதூர் மேடு கிராமத்தில் 60 ஆண்டு காலம் பழமை வாய்ந்த எழுந்தருளிய அருள்மிகு ஶ்ரீ செங்கமல வல்லித் தாயார் ஸமேத ஸ்ரீ சென்ன கேசவ பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

பழைய ஆலயம் புனரமைக்கப்பட்டு பல லட்ச ரூபாய் செலவில் மூலஸ்தானம் உள்ள இடத்தில் ஸ்ரீ செங்கமல வல்லித்தாயார்,ஸ்ரீசென்னகேசவ பெருமாள்,ஸ்ரீ துர்க்கையாழ்வார், கருடன், விமானம் மற்றும் நூதன பக்த ஆஞ்சநேயர் ஆகிய மூர்த்திகளுக்கு புதிய ஆலயம் கட்டப்பட்டு அதற்கான கும்பாபிஷேகம் ஏற்பாடு செய்யப்பட்டது.

கும்பாபிஷேக தினமான இன்று மூன்று கால யாக ஓமங்கள் செய்யப்பட்டு யாத்ரா தானத்துடன் கும்ப புறப்பாடு நடைபெற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது பின்னர் பல்வேறு நதியிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் கோவிந்தா… கோவிந்தா… என்ற கோஷத்துடன் சாமியை வணங்கினர். பின்பு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

செய்திகள் : பழவை முத்து / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed