மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 213ஆவது ‘தமிழ்க் கூடல்’ நிகழ்வு இன்று (29.10.2026) முற்பகல் 10.30 மணியளவில் உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள தொல்காப்பியர் அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஆய்வு வளமையர் முனைவர் ஜே. ஜான்சிராணி வரவேற்புரையாற்றினார். உலகத் தமிழ்ச் சங்கத்தின் தனிஅலுவலர் (பொ) முனைவர் ஔவை ந. அருள் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. சே. ஷேக்நபி முன்னிலையுரையாற்றினார்.


‘திருக்குறளில் மன அழுத்த மேலாண்மை’ – சிறப்புரை:
நிகழ்வில் அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் முனைவர் மா. லட்சுமி பிரியா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ‘திருக்குறளில் மன அழுத்த மேலாண்மை’ எனும் தலைப்பில் தமிழ்க்கூடலுரையாற்றினார்.
அவர் தனது உரையில் தெரிவித்ததாவது:
“யார் ஒருவர் வள்ளுவரை வாசிக்கத் தொடங்கிவிட்டாரோ அவர்தான் உலகில் மிகுந்த மகிழ்ச்சியானவர். விலங்குகள் எதுவும் மன அழுத்தத்தோடு இருப்பதில்லை; மனிதன் மட்டுமே மன அழுத்தத்தோடு இருக்கிறான். மனிதன் தேவையில்லாத விஷயங்களை 15 நாட்களுக்கு மேல் சிந்திக்கக் கூடாது. வள்ளுவர் சொல்லும் ஊக்கமுடைமை, அடக்கமுடைமை, பொறையுடைமை, வெகுளாமை ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.
நமது செயல்களுக்கு அடிப்படையாக விளங்குவது ஊழ் என்கிற விதியும், பொருளும், உழைப்பும் ஆகும். துன்பத்தைக் கண்டு மனம் கலங்காது உள்ளம் மகிழ வேண்டும் என்பதை ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்ற குறளின் வழியே வள்ளுவர் உணர்த்துகிறார். எதிர்பார்ப்பற்ற நிலை, பேசும் சொற்களைக் கட்டுப்பாட்டில் வைத்தல், நேர்மறைச் சிந்தனை, பற்றைச் சிறிது சிறிதாக விடுதல் ஆகியவற்றைத் திருக்குறள் போதிக்கிறது. மன அழுத்த மேலாண்மைக்கான மூச்சுப் பயிற்சிகளை மாணவர்கள் மேற்கொள்ளலாம். திருக்குறள் நமது சொத்து; நாம் எதைப் பாதுகாடிக்கிறோமோ இல்லையோ, திருக்குறளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.”


நன்றியுரை பங்கேற்பு ;
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 213 வது ‘தமிழ்க் கூடல்’ நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது!
நிகழ்வின் நிறைவாக உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஆய்வறிஞர் முனைவர் சு. சோமசுந்தரி நன்றியுரையாற்றினார்.
இவ்விழாவில் தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், மதுரை அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

