திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் தமிழ்நாடு வல்கனைசிங் பழுது பார்க்கும் தொழிலாளிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தினை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ரவி குத்துவிளக்கு ஏற்றி வாழ்த்துரை வழங்கினார்.

மாநில தலைவர் முத்துராஜ்தலைமையில் மாநில பொதுச் செயலாளர் இளையராஜா, பொருளாளர்கள் காண்டீபன்,ஸ்ரீ காந்த்,மாநில கௌரவ தலைவர்கள் எம்.ஜி.ஆர்.குமரேசன், பாலாஜி,மாநில சங்க காப்பாளர் கண்ணன், மாநில நிர்வாகி கோவை சௌந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் சங்க முன்னேற்றம் குறித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

சங்க நிர்வாகிகள் எடுத்துரைத்த கருத்துக்களின் அடிப்படையில்
சங்கத்தின் முக்கிய தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை மாநில நிர்வாகிகளுடன் இணைந்து திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
செய்திகள் : பழவை முத்து / எதிரொலி . இன் / 8939476777
