கிருஷ்ணகிரி அருகே உள்ள பீ. ஜி.புதூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ முத்துமாரியம் திருக்கோவில் உள்ளது. இந்த திருக்கோவிலை கிராம மக்கள் ஒன்றிணைந்து புதிதாக பல லட்சம் மதிப்பீட்டில் திருக்கோவிலை கட்டி முடித்த நிலையில், ஸ்ரீ முத்து மாரியம்மன் மற்றும் நவக்கிரக பிரதிஷ்டை கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று மகா கணபதி ஹோமத்துடன் துவங்கிய இந்த உற்சவத்தில் யாகசாலையில் புனித நீர் அடங்கிய கலசங்கள் வைத்து சிறப்பு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான இன்று அதிகாலை முதல் மற்றும் இரண்டாம் கால பூஜைகள் நடைபெற்றன. கே.வி. ஸ்ரீனிவாசர் ஐயர் தலைமையில் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை வேள்வியில் அக்னி பகவானுக்கு பூரண ஆகுதி சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் சால கோபுரம் மண்டபத்தின் மீது எடுத்து செல்லப்பட்டு அங்குள்ள கலசங்கள் மீது ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து கருவறையில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ முத்து மாரியம்மன் மற்றும் நவக்கிரக மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா மங்கள ஆரத்திகள் மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஶ்ரீ முத்து மாரியம்மனை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

மஹா குப்பாபிஷேக விழாவினை முன்னிட்டு அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. மேலும் இந்த கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை பி.ஜி.புதூர் கிராமத்தை சேர்ந்த ஊர் கவுண்டர்கள் மாதன், பழனி, மாதன் உள்ளிட பி.ஜி.புதூர் கிராம மக்கள் சிறப்பாக செய்து இருந்தனர். தொடர்ந்து 48 நாள்கள் மண்டல பூஜைகளும் நடைபெற உள்ளது.

கிருஷ்ணகிரி செய்தியாளர் : மாருதி – மனோ / எதிரொலி / 8939476778

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *